அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்த முறை சொற்பம் இல்லை கூடுதல் வித்தியாசத்தில் வெற்றி

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டசபை தொகுதியில், 2016ல் நடந்த தேர்தலில், தி.மு.க., சார்பில் அப்பாவு, அ.தி.மு.க., சார்பில் இன்பதுரை போட்டியிட்டனர். இந்த தேர்தலில், 49 ஓட்டுகள் வித்தியாசத்தில், இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.தேர்தல் வெற்றியை எதிர்த்து, அப்பாவு தொடர்ந்த வழக்கை, உயர் நீதிமன்றம் விசாரித்து, நிராகரிக்கப்பட்ட, 203 தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ண

சென்னை:திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டசபை தொகுதியில், 2016ல் நடந்த தேர்தலில், தி.மு.க., சார்பில் அப்பாவு, அ.தி.மு.க., சார்பில் இன்பதுரை போட்டியிட்டனர். இந்த தேர்தலில், 49 ஓட்டுகள் வித்தியாசத்தில், இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தல் வெற்றியை எதிர்த்து, அப்பாவு தொடர்ந்த வழக்கை, உயர் நீதிமன்றம் விசாரித்து, நிராகரிக்கப்பட்ட, 203 தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது. அதன்படி, ஓட்டு எண்ணிக்கையும் நடந்து முடிந்தது.இதை எதிர்த்து இன்பதுரை, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவே, ஓட்டு எண்ணிக்கை முடிவை அறிவிக்கக் கூடாது என, தடை வந்தது.

இந்நிலையில், சட்டசபைக்கு தேர்தல் வந்தது. மீண்டும், அதே இருவர் களத்தில் மோதினர். இன்பதுரையை விட, 5,925 ஓட்டுகள் அதிகம் பெற்று, அப்பாவு வெற்றி பெற்றார்.மூன்று முறை ராதாபுரம்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பாவு, நான்காவது முறையாக, இப்போதும் வெற்றி பெற்றுள்ளார்.ஓட்டு எண்ணிக்கை முடிவை அறிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், 2016 தேர்தலிலும் நானே வெற்றி பெறுவேன் என, நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X