அரசியல் செய்தி

தமிழ்நாடு

உத்திரமேரூர் சென்டிமென்ட் தகர்த்த தி.மு.க., சுந்தர்

Added : மே 03, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : உத்திரமேரூர் தொகுதியில், 1989 சட்டசபை தேர்தலுக்கு பின், ஒருமுறை ஜெயித்த கட்சி, அடுத்த தேர்தலில் வென்றது இல்லை என்ற, 'சென்டிமென்டை' தகர்த்து, தி.மு.க., வேட்பாளர் சுந்தர் வெற்றிவாகை சூடியதோடு, 50 ஆண்டுகளுக்குப் பின், தொடர்ந்து இரு முறை வென்ற தி.மு.க., வேட்பாளர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொகுதியில், 1 லட்சத்து, 25

உத்திரமேரூர் : உத்திரமேரூர் தொகுதியில், 1989 சட்டசபை தேர்தலுக்கு பின், ஒருமுறை ஜெயித்த கட்சி, அடுத்த தேர்தலில் வென்றது இல்லை என்ற, 'சென்டிமென்டை' தகர்த்து, தி.மு.க., வேட்பாளர் சுந்தர் வெற்றிவாகை சூடியதோடு, 50 ஆண்டுகளுக்குப் பின், தொடர்ந்து இரு முறை வென்ற தி.மு.க., வேட்பாளர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொகுதியில், 1 லட்சத்து, 25 ஆயிரத்து, 683 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து, 34 ஆயிரத்து, 651 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர், 33 என, மொத்தம், 2 லட்சத்து, 60 ஆயிரத்து, 367 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 2 லட்சத்து, 8 ஆயிரத்து, 425 பேர் ஓட்டளித்துள்ளனர். இது, மொத்த ஓட்டுப்பதிவில், 80.05 சதவீதமாகும். இத்தொகுதியில், 1989ல் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் சுந்தர் வெற்றி பெற்றார். பின், 1991ல் அ.திமு.க., 1996ல் தி.மு.க., 2001ல் அ.தி.மு.க., 2006ல் தி.மு.க., 2011ல் அ.தி.மு.க., 2016ல் தி.மு.க., என, மாறி மாறி, இரு கட்சிகளும் வெற்றி பெற்றன.
உத்திரமேரூர் தொகுதியில் ஒரு முறை வென்ற கட்சி, அடுத்த தேர்தலில் வெல்லாது என்ற சென்டிமென்ட், இரு கட்சியினரிடம் நிலவி வந்தது. இதனால், 2021 தேர்தலில், சென்டிமென்ட் படி, அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் வெற்றி பெறுவார் என, அக்கட்சியினர் நம்பிக்கையில் இருந்தனர்.ஆனால், தி.மு.க., வேட்பாளர் சுந்தர், 93 ஆயிரத்து, 427 ஓட்டுகள் பெற்று, அ.தி.மு.க., வேட்பாளரைவிட, 1,622 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இதன் மூலம், உத்திரமேரூர் தொகுதியில், 1989 முதல், ஒரு முறை ஜெயித்த கட்சி மீண்டும் வெல்லாது என்ற சென்டிமென்டை தகர்த்து, தி.மு.க., வேட்பாளர் சுந்தர் வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கு முன், கடந்த, 1967, 1971ல் நடந்த தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கே.எம்.ராஜாகோபால், தொடர்ச்சியாக இருமுறை வென்றார். அதன்பின், இத்தொகுதியில், தொடர்ந்து இருமுறை போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. அதை, 50 ஆண்டுகளுக்கு பின், சுந்தர் நிகழ்த்தி காட்டிஉள்ளார்.ஏழாவது முறையாக தி.மு.க.,கடந்த, 1967ம் ஆண்டு தி.மு.க., துவங்கிய வெற்றி, 1971, 1989, 1996, 2006, 2016 என, ஆறு முறை வெற்றி கனியை சுவைத்துள்ளது. தி.மு.க.,வினருக்கு சளைக்காமல், 1977, 1980, 1984, 1991, 2001, 2011 என, ஆறு முறை அ.தி.மு.க., வென்றுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த சுந்தர் என்பவர், அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரத்தை வீழ்த்தி, வெற்றி பெற்று உள்ளார். இந்த வெற்றி மூலமாக, ஏழாவது முறையாக உத்திரமேரூர், தி.மு.க.,வுக்கு கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X