அரசியல் செய்தி

தமிழ்நாடு

காஞ்சி தெற்கு மாவட்டத்தில்

Added : மே 03, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் தி.மு.க., தெற்கு மாவட்டத்தில், யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு, தி.மு.க.,வினரிடையே பேசுபொருளாக உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, நான்கு தொகுதிகளையும், தி.மு.க., மற்றும் கூட்டணி கைப்பற்றியுள்ளன.உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் என, இரு தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களின்

காஞ்சிபுரம் தி.மு.க., தெற்கு மாவட்டத்தில், யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு, தி.மு.க.,வினரிடையே பேசுபொருளாக உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, நான்கு தொகுதிகளையும், தி.மு.க., மற்றும் கூட்டணி கைப்பற்றியுள்ளன.உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் என, இரு தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களின் ஓட்டுகள், ஒவ்வொரு சுற்றிலும் கடும் போட்டியாக இருந்தது. இவற்றில், வெற்றி நிலவரத்தை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாமலேயே இருந்தது.

இறுதியாக, இரு தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணியே வெற்றி பெற்றது. இந்நிலையில், தி.மு.க., தெற்கு மாவட்டத்தில், யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.காஞ்சிபுரம் தொகுதியில், இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ள எழிலரசனுக்கா அல்லது உத்திரமேரூர் தொகுதியில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ள சுந்தருக்கா என, கேள்வி எழுந்துள்ளது.தி.மு.க.,வின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில், மூத்த கட்சி நிர்வாகியும், மாவட்ட செயலருமான சுந்தர், 1989ம் ஆண்டிலேயே எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின், 1996, 2006, 2016 என, தொடர் வெற்றியை பெற்றவர். சுந்தருக்கு முக்கியத்துவம் அளிக்க வாய்ப்பு இருப்பதாகவே, கட்சியினர் பேசி வருகின்றனர்.அதேசமயம், மாநில மாணவர் அணி செயலராக எழிலரசன் இருப்பதால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என, எழிலரசன் ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X