அரசியல் செய்தி

தமிழ்நாடு

சோமசுந்தரம் வெற்றியை மாற்றிய ரஞ்சித்குமார்

Added : மே 03, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் தொகுதியில், கட்சி மாறி அ.ம.மு.க., சார்பில் போட்டியிட்ட ரஞ்சித்குமார், 7,211 ஓட்டுகளை பிரித்ததால், சோமசுந்தரம் தோல்வியடைந்ததாக கருத்து எழுந்துள்ளது. உத்திரமேரூர் தொகுதியில், ஏழாவது முறையாக தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் சுந்தர். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம், குறைவான

உத்திரமேரூர் தொகுதியில், கட்சி மாறி அ.ம.மு.க., சார்பில் போட்டியிட்ட ரஞ்சித்குமார், 7,211 ஓட்டுகளை பிரித்ததால், சோமசுந்தரம் தோல்வியடைந்ததாக கருத்து எழுந்துள்ளது.

உத்திரமேரூர் தொகுதியில், ஏழாவது முறையாக தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் சுந்தர். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம், குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.பரபரப்புஓட்டு எண்ணும் மையத்தில், உத்திரமேரூர் தொகுதிக்கான ஓட்டு எண்ணும் அறைகள், இரவு, 10:00 மணி வரை பரபரப்பாகவே காணப்பட்டது.முதல் சுற்று முடிவில், 6,122 ஓட்டுகளை சுந்தர் பெற்றிருந்தார். இவரைவிட சற்று குறைவாக, 5,779 ஓட்டுகளை சோமசுந்தரம் பெற்றார். பின், ஒவ்வொரு சுற்றிலும், சுந்தரைவிட சோமசுந்தரமே கூடுதல் ஓட்டுகளை பெற்று வந்தார்.

இரண்டாவது சுற்று முதல், 10வது சுற்று வரை, சோமசுந்தரமே கூடுதல் ஓட்டுகளை பெற்று முன்னிலை வகித்து வந்தார். இதனால், அ.தி.மு.க., நிர்வாகிகள், கட்சி முகவர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.சலிப்புபின், 11வது சுற்றில், சுந்தர் கூடுதல் ஓட்டுகளை பெற்றார். அதாவது, சோமசுந்தரம், 76 ஆயிரத்து, 715 ஓட்டுகளும், சுந்தர், 77 ஆயிரத்து, 17 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். 12வது சுற்றில், மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரம் பழுதானதால், கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது.பழுதான இயந்திரத்தின் ஓட்டுகளை தவிர்த்து மற்ற ஓட்டுகளை கூட்டினால், இருவரிடையே, 91 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. இந்த, 91 ஓட்டுகளில், சுந்தர் முன்னிலையில் இருந்தார்.

இறுதியாக, பழுதான இயந்திரத்தின், 'விவிபிஏடி' சீட்டுகளை எண்ணி முடிவு வெளியிடப் பட்டது. 13வது சுற்றிலும், தபால் ஓட்டுகளிலும், சுந்தர், கூடுதலாக, 1,622 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த, 1622 ஓட்டுகள் என்பது மிக குறைவான ஓட்டு வித்தியாசம் என்பதால், அ.தி.மு.க.,வினர் சலிப்படைந்தனர்.அ.தி.மு.க.,வில் இருந்து அ.ம.மு.க.,வுக்கு மாறி, உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட ரஞ்சித்குமார், 7,211 ஓட்டுகள் பெற்றிருந்தார். இந்த, 7,211 ஓட்டுகள் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால், சோமசுந்தரம் வெற்றி பெற்றிருப்பார் என, அனைவரும் கருத்து கூறி வருகின்றனர். ரஞ்சித்குமார், கட்சி மாறி போட்டியிடாமல் இருந்திருந்தால், உத்திரமேரூர் அ.தி.மு.க., வசம் சென்றிருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X