எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

கமல், சீமான் கட்சிகளுக்கு ஓட்டு: தினகரன், விஜயகாந்த் கட்சிகள் 'ஷாக்'

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை :தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்ததாக, பல தொகுதிகளில், நாம் தமிழர் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்யமும், அதிக ஓட்டுகளை பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. கமலின் மக்கள் நீதி மய்யம், 135 தொகுதிகளில் போட்டியிட்டது. ம.நீ.ம.,வும், சீமான் கட்சியும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சிகளின்
 கமல், சீமான் கட்சிகள்,  ஓட்டு, தினகரன், விஜயகாந்த்,'ஷாக்'

சென்னை :தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்ததாக, பல தொகுதிகளில், நாம் தமிழர் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்யமும், அதிக ஓட்டுகளை பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. கமலின் மக்கள் நீதி மய்யம், 135 தொகுதிகளில் போட்டியிட்டது. ம.நீ.ம.,வும், சீமான் கட்சியும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சிகளின் தலைவர்களும் வெற்றி பெறவில்லை.


latest tamil news



latest tamil news



latest tamil news


ஆனால், இரு கட்சிகளின் வேட்பாளர்களும், பெரும்பாலான இடங்களில், 1௦ ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றுள்ளனர்.அதிலும், தினகரனின் அ.ம.மு.க., மற்றும் விஜயகாந்தின் தே.மு.தி.க., வேட்பாளர்களையும், இந்த இரண்டு கட்சிகளும் பின்னுக்கு தள்ளியுள்ளன.உதாரணமாக, சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 தொகுதிகளிலும், ம.நீ.ம.,வும், சீமான் கட்சியும், மூன்று மற்றும் நான்காம் இடங்களில் உள்ளன. இந்த இரு கட்சி வேட்பாளர்களின் ஓட்டுகளை விட, ஐந்து மடங்கு குறைவான ஓட்டுகளை, ஆயிரம், இரண்டாயிரம் என்ற அளவில் தான், தினகரன் மற்றும் விஜயகாந்த் கட்சியினர் பெற்று உள்ளனர்.

தலைநகரான சென்னை மாவட்டத்திலேயே பெரும்பாலான தொகுதிகளில், 10 ஆயிரத்துக்கு மேல் இரண்டு கட்சிகளும் ஓட்டுகளை பெற்றுள்ளன. அதில் நா.த.க., அதிகபட்சமாக, ஆர்.கே.நகரில், 20 ஆயிரத்து, 437 ஓட்டுகளும், குறைந்தபட்சமாக துறைமுகத்தில், 3,357 ஓட்டுகளும் பெற்றுள்ளது. ம.நீ.ம., கட்சி அதிகபட்சமாக, வேளச்சேரி தொகுதியில், 23 ஆயிரத்து, 72 ஓட்டுகளும், குறைந்தபட்சமாக துறைமுகத்தில், 3,763 ஓட்டுகளும் பெற்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaraman - chennai ,இந்தியா
04-மே-202120:39:57 IST Report Abuse
Sivaraman ஆர் கே நகர் தினகரன் செயிச்ச ஒட்டு காணாம போச்சே என்னய்யா மந்திரமா இருக்கு 1
Rate this:
Cancel
Raj - Namakkal,சவுதி அரேபியா
04-மே-202113:40:52 IST Report Abuse
Raj அடுத்த தேர்தலில் அதிமுகவை பின் தள்ளி இரண்டாம் இடத்தை பெரும்
Rate this:
Cancel
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
04-மே-202110:35:05 IST Report Abuse
ngopalsami சீமானைப்போல நல்ல திறமையான பேச்சாளர்கள் சிலர் சட்டசபையில் இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
04-மே-202115:31:02 IST Report Abuse
pradeesh parthasarathyஅது பேச்சு போட்டி நடத்துற இடம் இல்லை அது .......
Rate this:
Kannan - Madurai,கனடா
05-மே-202108:30:35 IST Report Abuse
Kannanஅப்புறம் கொள்ளையடிக்க திட்டம் போடுற இடமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X