அரசியல் செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 858 தபால் ஓட்டுகள் வீண்

Added : மே 03, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : அரசு ஊழியர்கள், தங்களின் தபால் ஓட்டுகளை முறையாக செலுத்தாததால், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுாரில், 858 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாகியுள்ளன. தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்து உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, நான்கு தொகுதிகளிலும் தி.மு.க.,

காஞ்சிபுரம் : அரசு ஊழியர்கள், தங்களின் தபால் ஓட்டுகளை முறையாக செலுத்தாததால், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுாரில், 858 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாகியுள்ளன.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்து உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, நான்கு தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.இதில், உத்திரமேரூர் தொகுதியில், வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் அளவு, தபால் ஓட்டுகளின் முக்கியத்துவம் இருந்தது. அவ்வாறு உள்ள நிலையில், நுாற்றுக்கணக்கான தபால் ஓட்டுகள், செல்லாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தபால் ஓட்டுகளை செலுத்தும் அரசு ஊழியர்கள், போலீசார், ராணுவத்தினர் ஆகியோருக்கு தபால் ஓட்டு போடுவது எப்படி என, முன்கூட்டியே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அரசு ஊழியர்களுக்கு, தேர்தல் பயிற்சியின்போதும் தபால் ஓட்டு குறித்து விளக்கமளிக்கப் படுகிறது.அவ்வாறு இருந்தும், முறையாக தபால் ஓட்டு போடாததால், அவை செல்லாத ஓட்டுகளாகின்றன. தபால் ஓட்டு போடும்போது, அதிகாரிகளின் கையெழுத்து இல்லாமல் போடுவதும், உறுதியளிப்பு சான்று இல்லாமலும், 'டிக்' அடிக்காமலும் ஓட்டு போடுகின்றனர். இதன் காரணமாக, ஒவ்வொரு தொகுதியிலும் நுாற்றுக்கணக்கான ஓட்டுகள் வீணாகியுள்ளன. உத்திரமேரூர் தொகுதியில், 442 ஓட்டுகளும், காஞ்சிபுரம் தொகுதியில், 385 ஓட்டுகளும், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில், 31 ஓட்டுகளும் செல்லாத ஓட்டுகளாக கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆலந்துார் தொகுதியில், அனைத்து தபால் ஓட்டுகளும் ஏற்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X