பொது செய்தி

தமிழ்நாடு

கட்டி போடலாம் --- அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு நடவடிக்கை தேவை

Added : மே 03, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் படுக்கை வசதிகளுடன் மருத்துவ உதவி மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் படுக்கை வசதிகளுடன் மருத்துவ உதவி மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் தேவைக்கேற்ப, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், போதிய வசதிகள் இல்லாத நிலை உள்ளது.மருத்துவமனையில் தற்போது, 317 படுக்கை வசதிகளே உள்ளன. இதில் ஆக்ஸிஜன் வசதியுடன், 211 படுக்கைகள் மட்டும் உள்ளன. அவையும் நிரம்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோர், எழிச்சூர் சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.அங்கு செல்ல, பலரும் எதிர்ப்பு தெரிவிப்பதால், மருத்துவமனையிலேயே, கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, கடந்த வாரம் தெரிவித்தார்.

மேலும், 'மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல்நோக்கு புதிய கட்டடத்தில், அதற்கான ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது' என்றார்.அதற்கான வேலை இன்னும் முழுமை அடையாததால், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு, சிகிச்சை அளிப்பதில், கடும் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.இது குறித்து, மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மருத்துவமனையில் தற்போது, 6,000 லிட்டர் கொள்ளளவு உடைய ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளது. அதுவும், இரண்டு நாளைக்கு மட்டுமே வரும். இரு நாட்களுக்கு ஒரு முறை, ஆக்ஸிஜன் நிரப்பி செல்கின்றனர்.
கூடுதலாக, 10 ஆயிரம் கி.லிட்டர் கொள்ளளவு உடைய சிலிண்டர் இருந்தால், நோயாளிகள் அதிகரிப்புக்கு தகுந்தவாறு பயன்படுத்தலாம்.அனைத்து வார்டுகளையும், கொரோனா வார்டாக மாற்றி விட்டோம். எனினும், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு, மினி கிளினிக் மருத்துவர்களை அனுப்புவதாக கூறியது; இதுவரை ஒருவர் கூட வரவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் பலர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, விடுப்பில் உள்ளனர்.கடந்த ஆண்டைப்போல், காஞ்சிபுரம் அருகில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில், சிகிச்சைக்கான நடவடிக்கை எடுத்தால் சமாளிக்கலாம். மாவட்ட கலெக்டர், சுகாதாரத் துறை அதிகாரிகள், இதற்கான ஏற்பாடை அவசரமாக செய்தால் மட்டுமே சமாளிக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X