பொது செய்தி

தமிழ்நாடு

பாலாறு குடிநீர் அளவு தெரிய டேங்குகளில் மீட்டர் பொருத்தம்

Added : மே 03, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : பாலாறு கூட்டு குடிநீர் திட்ட குடிநீரின் அளவை அறிய, கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள், 'டேங்'குகளில் மீட்டர் அமைத்து வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த, கோயம்பாக்கம், அய்யன்பேட்டை, நாயக்கன்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில், பாலாறு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு, பல ஊராட்சிகளுக்கு, சுத்தமான பாலாறு குடிநீர் வினியோகம்

வாலாஜாபாத் : பாலாறு கூட்டு குடிநீர் திட்ட குடிநீரின் அளவை அறிய, கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள், 'டேங்'குகளில் மீட்டர் அமைத்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த, கோயம்பாக்கம், அய்யன்பேட்டை, நாயக்கன்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில், பாலாறு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு, பல ஊராட்சிகளுக்கு, சுத்தமான பாலாறு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.பாலாறு குடிநீர் வினியோகம் செய்வதில், கூடுதல் பணம் வசூலிப்பதாக, சில ஊராட்சிகளில் புகார் எழுந்தது. இதையடுத்து, கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள், வினியோகிக்கப்படும் குடிநீர் அளவை தெரிந்துகொள்ள, டேங்குகளில் மீட்டர் பொருத்த துவங்கி உள்ளனர்.அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியம், அய்யன்பேட்டை ஊராட்சியில், மேலத்தெரு, நடுத்தெரு உள்ளிட்ட ஆறு இடங்களில் இருக்கும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில், தண்ணீரின் கொள்ளளவை தெரிந்து கொள்வதற்கு, மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது.

அதேபோல், ஊராட்சியில் எவ்வளவு குடிநீர் வினியோகம் செய்கிறோம் என அறிய, மற்றொரு மீட்டரும் பொருத்தப்பட்டு உள்ளது.இதேபோல், பாலாறு கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும், அனைத்து ஊராட்சிகளிலும், அளவு மீட்டரை பொருத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X