பொது செய்தி

தமிழ்நாடு

'அம்மா' உணவகம் மீண்டும் திறப்பு

Added : மே 03, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகில், மேற்கூரை விழுந்து சேதமடைந்த அம்மா உணவகம் சரிசெய்யப்பட்டு, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகில், அம்மா உணவகம் இயங்கி வருகிறது. காலை, மதியம் என, இரு வேளைகள், குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைக்கு செல்லும் பல்வேறு கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகில், மேற்கூரை விழுந்து சேதமடைந்த அம்மா உணவகம் சரிசெய்யப்பட்டு, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகில், அம்மா உணவகம் இயங்கி வருகிறது.

காலை, மதியம் என, இரு வேளைகள், குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைக்கு செல்லும் பல்வேறு கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது.இந்நிலையில், ஏப்ரல், 19ம் தேதி இரவு, அம்மா உணவகத்தின் கூரை உடைந்து விழுந்தது. இரவு விழுந்ததால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து, உணவகத்தில் சீரமைப்பு பணி நடந்தது. பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது, அம்மா உணவம் செயல்பாட்டுக்கு வந்தது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, மக்கள் வருகை, முன்பைவிட குறைந்துள்ளது. எனினும், அவர்களுக்காக, அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X