தகர்ந்தது அ.தி.மு.க., கோட்டை 59 ஆண்டுக்கு பின் காங்., வசம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தகர்ந்தது அ.தி.மு.க., கோட்டை 59 ஆண்டுக்கு பின் காங்., வசம்

Added : மே 03, 2021
Share
பொன்னேரி : பொன்னேரி தொகுதியில், 20 ஆண்டுகளாக கோலோச்சிய அ.தி.மு.க.,வின் கோட்டையை, காங்கிரஸ் கட்சி தகர்த்துள்ளது. பொன்னேரி சட்டசபை தொகுதியில், 1996ம் ஆண்டு, தி.மு.க., வெற்றி பெற்றது. அதன்பின், 2001, 2006, 2011, 2021 என, தொடர்ந்து, அ.தி.மு.க.,விடம் தோல்வியை தழுவியது. அதை தொடர்ந்து, 20 ஆண்டுகளாக அ.தி.மு.க., பொன்னேரி தொகுதியில் கோலோச்சி வந்தது. நேற்றைய தேர்தல் முடிவுகளில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் துரை

பொன்னேரி : பொன்னேரி தொகுதியில், 20 ஆண்டுகளாக கோலோச்சிய அ.தி.மு.க.,வின் கோட்டையை, காங்கிரஸ் கட்சி தகர்த்துள்ளது.
பொன்னேரி சட்டசபை தொகுதியில், 1996ம் ஆண்டு, தி.மு.க., வெற்றி பெற்றது. அதன்பின், 2001, 2006, 2011, 2021 என, தொடர்ந்து, அ.தி.மு.க.,விடம் தோல்வியை தழுவியது. அதை தொடர்ந்து, 20 ஆண்டுகளாக அ.தி.மு.க., பொன்னேரி தொகுதியில் கோலோச்சி வந்தது. நேற்றைய தேர்தல் முடிவுகளில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் துரை சந்திரசேகர், அ.தி.மு.க., வேட்பாளர் பலராமனை விட, 10,406 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார்.

அ.தி.மு.க.,வின் கோட்டையாக கருதப்பட்ட பொன்னேரி தொகுதியை, காங்கிரஸ் கட்சி தகர்த்து உள்ளது.மேலும், 1962ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, டி.பி.ஏழுமலை இந்த தொகுதியில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ., வாக இருந்தார். அதன்பின், 59 ஆண்டுகளுக்கு பின்னர், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X