‛பாரதியார் தொடர் சொற்பொழிவு வரும் 12ம் தேதி முதல் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'‛பாரதியார்' தொடர் சொற்பொழிவு வரும் 12ம் தேதி முதல் துவக்கம்

Added : மே 04, 2021
Share
சென்னை : பாரதியார் பற்றிய இணைய வழி சொற்பொழிவு, 'குவிகம்' அமைப்பின் சார்பில், புதன் கிழமை களில் நடக்க உள்ளது. 'குவிகம்' என்னும் அமைப்பு, பாரதியாரின் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், 'மகாகவியின் மந்திரச் சொற்கள்' என்ற நிகழ்ச்சியை, இணைய வழியில் நடத்த உள்ளது. 12 வாரங்கள் நடக்கும் இதை, பேராசிரியர் வ.வே.சு., தொகுத்து வழங்குகிறார். பாரதியாரின், 'பாஞ்சாலி

சென்னை : பாரதியார் பற்றிய இணைய வழி சொற்பொழிவு, 'குவிகம்' அமைப்பின் சார்பில், புதன் கிழமை களில் நடக்க உள்ளது.

'குவிகம்' என்னும் அமைப்பு, பாரதியாரின் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், 'மகாகவியின் மந்திரச் சொற்கள்' என்ற நிகழ்ச்சியை, இணைய வழியில் நடத்த உள்ளது. 12 வாரங்கள் நடக்கும் இதை, பேராசிரியர் வ.வே.சு., தொகுத்து வழங்குகிறார். பாரதியாரின், 'பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாரதியார் பாடல்கள், புதிய ஆத்திசூடி, சுயசரிதை, ஞானரதம், வசன கவிதை உள்ளிட்டவை குறித்து, வாரந்தோறும் புதன்கிழமை மாலை, 6.30 மணி முதல் 7.30 மணி வரை, 'ஜூம்' செயலி வழியாக, இணைய வழியில் நடக்க உள்ளது. இதன் முதல் நிகழ்ச்சி, வரும், 12ம் தேதி துவங்க உள்ளது.

சொற்பொழிவின் முடிவில், வாசகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, அடுத்த வாரம் பதில் அளிக்கப்படும்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், பெயர் மற்றும் தொடர்பு எண்ணை, 89396 04745 என்ற மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, பதிவு செய்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கு, சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X