அரசியல் செய்தி

தமிழ்நாடு

20 ஆண்டுகளுக்குப் பின் திமுக வசமானது கும்மிடிப்பூண்டி

Added : மே 04, 2021
Share
Advertisement
ஊத்துக்கோட்டை : தமிழகத்தின் முதல் சட்டசபை தொகுதியான கும்மிடிப்பூண்டியை, 20 ஆண்டுகளுக்குப் பின், தி.மு.க., தங்களது வசமாக்கியது. தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, முதல் சட்டசபை தொகுதி. 1957ம் ஆண்டு முதல், ஒரு இடைத்தேர்தல் உட்பட, 15 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. இதில், அ.தி.மு.க., - 8, தி.மு.க., - 4, தே.மு.தி.க., - 1, காங்கிரஸ் - 1, சுதந்திரா கட்சி - 1,

ஊத்துக்கோட்டை : தமிழகத்தின் முதல் சட்டசபை தொகுதியான கும்மிடிப்பூண்டியை, 20 ஆண்டுகளுக்குப் பின், தி.மு.க., தங்களது வசமாக்கியது.

தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, முதல் சட்டசபை தொகுதி. 1957ம் ஆண்டு முதல், ஒரு இடைத்தேர்தல் உட்பட, 15 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. இதில், அ.தி.மு.க., - 8, தி.மு.க., - 4, தே.மு.தி.க., - 1, காங்கிரஸ் - 1, சுதந்திரா கட்சி - 1, என, வெற்றி பெற்றுள்ளன.கடந்த, 20 ஆண்டுகளாக, அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியின் கைவசம் இருந்தது இத்தொகுதி. கடைசியாக, 1996ம் ஆண்டு, தி.மு.க., சார்பில் வேணு எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார்.சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம், 12 பேர் களத்தில் இருந்தனர்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில், மொத்த ஓட்டுகள், 2 லட்சத்து, 817 ஆயிரத்து, 632. இதில், 77.92 சதவீதம் பதிவானது. ஓட்டு எண்ணிக்கை முடிவில், தி.மு.க., கோவிந்தராஜன், 1 லட்சத்து, 26 ஆயிரத்து, 452 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.இவருக்கு அடுத்தபடியாக, பா.ம.க., வேட்பாளர் பிரகாஷ், 75 ஆயிரத்து, 514, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உஷா, 11 ஆயிரத்து, 701 பெற்றனர்.தி.மு.க., வேட்பாளர் கோவிந்தராஜன், 50 ஆயிரத்து, 938 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.கடந்த, 20 ஆண்டுகளுக்குப் பின் தி.மு.க., கும்மிடிப்பூண்டி தொகுதியை தங்களது வசமாக்கியது, கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X