பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தால் மாநகராட்சி அதிகாரிகள் கலக்கம்

Added : மே 04, 2021
Share
Advertisement
தமிழகத்தில், ஆட்சி மாற்றம் நடைபெற்று இருப்பதால், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள், தங்கள் பதவியை தக்க வைக்க முடியுமா என, கலக்கம் அடைந்துள்ளனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. விரைவில், அதன் தலைவர் ஸ்டாலின், முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில்,

தமிழகத்தில், ஆட்சி மாற்றம் நடைபெற்று இருப்பதால், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள், தங்கள் பதவியை தக்க வைக்க முடியுமா என, கலக்கம் அடைந்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. விரைவில், அதன் தலைவர் ஸ்டாலின், முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில், நான்காண்டுகளுக்கு மேலாக, உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த வேலுமணியின் வழிகாட்டுதல்படி, அதிகாரிகள் செயல்பட்டனர். இதனால், அதிகாரிகளில் சிலர், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்குவதும், தேவையான காரியங்களை செய்து கொள்வதுமாக இருந்தனர். பணி ஓய்வு பெற்றாலும், அமைச்சரின் செல்வாக்கால், பணி நீட்டிப்பு பெற்று, தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக, சென்னை மாநகராட்சியின் முதன்மை தலைமை பொறியாளராக இருந்தவர் முதல், தற்போது மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ளவர் வரை, பணி ஓய்வு பெற்றபின், இரண்டாண்டு நீட்டிப்பு பெற்றுள்ளனர்.அதேபோல், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மேயர் இல்லாத நிலையில், அதிகாரிகள் தனி செல்வாக்குடன் செயல்படுவதால், சாமானியர்கள் அவர்களை சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும் முடியாத நிலை உள்ளது. எந்த பணியாக இருந்தாலும், லஞ்சம், ஊழல் என்றாகிவிட்ட மாநகராட்சியில், தற்போது நடைபெறவுள்ள ஆட்சி மாற்றத்தால், பெரும் மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் சிலர், மாநகராட்சியில் தங்கள் பதவியை தக்க வைக்க முடியுமா என்ற சந்தேகத்தில் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலுக்குப் பின், ஆட்சி மாற்றத்திற்குப் பின், அதிகாரிகள் மாற்றம் நிகழ்வது இயல்பான ஒன்றே என்றாலும், தற்போது, 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த, தி.மு.க., ஆட்சிக் கட்டிலில் ஏறுவதால், பெரிய அளவில் மாற்றம் இருக்கலாம் என்ற பீதியில், அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X