அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வராகும் ஸ்டாலினுக்கு திரையுலகத்தினர் வாழ்த்து

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக முதல்வராக பதவியேற்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில், 'சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில், தமிழகம் வரலாறு காணாத வளர்ச்சியடைய; இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய் திகழ, தி.மு.க., கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்' என, கூறியுள்ளார். நாடக

சென்னை:தமிழக முதல்வராக பதவியேற்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில், 'சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில், தமிழகம் வரலாறு காணாத வளர்ச்சியடைய; இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய் திகழ, தி.மு.க., கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்' என, கூறியுள்ளார். நாடக நடிகர் எஸ்.வி.சேகர், ஸ்டாலின் மற்றும் உதயநிதியுடன் இருக்கும் படங்களுடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு:

மாபெரும் வெற்றி பெற்று, ஆறாவது முறையாக ஆட்சி அமைக்கப்போகும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு வாழ்த்துகள்.ஹிந்துக்களுக்கு நாங்கள் எதிரி இல்லை என சொன்ன உங்களுக்கு, ஹிந்துக்களும் உங்களுக்கு எதிரி இல்லை என, நிரூபித்து விட்டனர். சிறந்த முதல்வராக திகழ வாழ்த்துகள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சின்னத்திரை நடிகர் சங்கம், பெப்சி உள்ளிட்ட அமைப்புகள், துவண்டு போயுள்ள திரைத்துறையை காப்பாற்ற வேண்டும் என, கோரியுள்ளனர். தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம், 'புதிதாக பொறுப்பேற்க உள்ள தி.மு.க., அரசு, தியேட்டர் உரிமையாளர்கள் நலனை காக்கும் வகையில், 8 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X