அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சி நிர்வாகிகள் உள்ளடியால் அ.தி.மு.க., வேட்பாளர் தோல்வி

Added : மே 04, 2021
Share
Advertisement
கட்சி நிர்வாகிகள் மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ., ஆகியோர் உள்ளடி வேலையால், அ.தி.மு.க., வேட்பாளர் தோல்வி அடைந்தார் என, அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருத்தணி சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.சந்திரனும், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.பி., கோ. அரி உட்பட, 14 பேர் போட்டியிட்டனர்.இதில், தி.மு.க., - -அ.தி.மு.க., வேட்பாளர் இடையே தான் நேரடி

கட்சி நிர்வாகிகள் மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ., ஆகியோர் உள்ளடி வேலையால், அ.தி.மு.க., வேட்பாளர் தோல்வி அடைந்தார் என, அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருத்தணி சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.சந்திரனும், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.பி., கோ. அரி உட்பட, 14 பேர் போட்டியிட்டனர்.இதில், தி.மு.க., - -அ.தி.மு.க., வேட்பாளர் இடையே தான் நேரடி போட்டி நிலவியது. ஓட்டு எண்ணிக்கையின் போது, 29 சுற்றுகளிலும், தி.மு.க.,- - அ.தி.மு.க., வேட்பாளர்கள் தான் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.முடிவில், தி.மு.க., வேட்பாளர் எஸ். சந்திரன், 1 லட்சத்து, 20 ஆயிரத்து, 314 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளர் கோ.அரி, 91 ஆயிரத்து, 61 ஓட்டுகள் பெற்று தோல்வியை தழுவினார்.கட்சி நிர்வாகிகள் மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ., ஆகியோர் உள்ளடி வேலையால், அ.தி.மு.க., வேட்பாளர் தோல்வி அடைந்தார்.

மேலும், கட்சியின் பெரும்பாலான ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக செயலர்கள் உண்மையாக வேலை செய்யவில்லை என, அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கூட்டணி கட்சியினர் உழைப்பால் தான் இந்தளவுக்கு ஓட்டுகள் பெற முடிந்தது. அ.தி.மு.க., வேட்பாளர் அரி, தொகுதி மக்களிடம் நன்மதிப்பு பெற்றிருந்தும், கட்சி நிர்வாகிகள் உள்ளடி வேலையால் தான் தற்போது தோல்வி அடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X