நோட்டாவுக்கு வீழ்ச்சி ஏன்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நோட்டா'வுக்கு வீழ்ச்சி ஏன்?

Added : மே 04, 2021
Share
சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில், நோட்டாவுக்கான ஓட்டுகள் வெகுவாக குறைந்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில், பதிவான ஓட்டுகளை எண்ணும் பணிகள் முடிந்துள்ளன. இதில், பிரதான கட்சிகள் பெற்ற இடங்கள், ஓட்டுகள் குறித்து பரவலாக ஆராயப்பட்டு வருகிறது. தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் தேர்வு செய்ய விரும்பாதவர்கள், தங்கள் ஓட்டை பதிவு செய்ய 'நோட்டா' வாய்ப்பு

சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில், நோட்டாவுக்கான ஓட்டுகள் வெகுவாக குறைந்துள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலில், பதிவான ஓட்டுகளை எண்ணும் பணிகள் முடிந்துள்ளன. இதில், பிரதான கட்சிகள் பெற்ற இடங்கள், ஓட்டுகள் குறித்து பரவலாக ஆராயப்பட்டு வருகிறது. தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் தேர்வு செய்ய விரும்பாதவர்கள், தங்கள் ஓட்டை பதிவு செய்ய 'நோட்டா' வாய்ப்பு வழங்கப்பட்டது. ஓட்டுப்பதிவு இயந்திரத்திலேயே இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் நோட்டாவுக்கு, 5.82 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகின. இது, மொத்தம் பதிவான ஓட்டுக்களில், 1.4 சதவீதம். பின், 2016 சட்டசபை தேர்தலில், நோட்டாவில், 5.65 லட்சம்; அதாவது, 1.3 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இது, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெகுவாக குறைந்துள்ளது.இத்தேர்தலில், நோட்டாவிற்கு, 3.45 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.

இது, பதிவான மொத்த ஓட்டுக்களில், 0.75 சதவீதம் தான்.பிரதான கட்சிகளை விரும்பாத மக்கள், நாம் தமிழர், ம.நீ.ம., போன்ற புதிய கட்சிகளுக்கு தங்கள் ஓட்டுக்களை செலுத்தியது, நோட்டாவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என, கூறப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X