சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆவடி தொடர் திருட்டில் பாதிக்கப்பட்டோர் ஏமாற்றம்

Added : மே 04, 2021
Share
Advertisement
ஆவடி : ஆவடி தொடர் திருட்டில், இரு சிறுவர்கள் கைதான நிலையில், பறிகொடுத்த பணம், பொருட்கள் கிடைக்காமல், வியாபாரிகள் சோகத்தில் உள்ளனர். ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில், 27ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் இருவர், விடிய விடிய தொடர் திருட்டில் ஈடுபட்டனர்.அவர்கள் ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில், 11 கடைகளின், 'ஷட்டர்'களை உடைத்து திருடினர். இதில்,

ஆவடி : ஆவடி தொடர் திருட்டில், இரு சிறுவர்கள் கைதான நிலையில், பறிகொடுத்த பணம், பொருட்கள் கிடைக்காமல், வியாபாரிகள் சோகத்தில் உள்ளனர்.

ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில், 27ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் இருவர், விடிய விடிய தொடர் திருட்டில் ஈடுபட்டனர்.அவர்கள் ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில், 11 கடைகளின், 'ஷட்டர்'களை உடைத்து திருடினர். இதில், மளிகைக்கடையில், 100 கிராம் வெள்ளி கட்டி, 28 ஆயிரம் ரூபாய், 2 ஸ்வைப்பிங் மிஷின், 2 மொபைல்போன்கள், பெட்டிக்கடை, சிம்கார்டு கடை ஆகியவற்றில், 7,000 ரூபாய், 2 மடிக்கணினி, 3 மொபைல் போன்களை திருடினர்.ஆவடி, பருத்திப்பட்டு, ராம்நகரைச் சேர்ந்த விஜய், 27 என்பவரது பல்சர் என்.எஸ்., இருசக்கர வாகனத்தையும் திருடியது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

இச்சம்பவத்தில், ஆவடி காவல் நிலையத்தில் இருவரிடமும், திருவேற்காடு காவல் நிலையத்தில் ஒருவரிடம் மட்டுமே போலீசார் புகாரை பெற்றனர்.இரண்டு தனிப்படை அமைத்து, போலீசார் தேடியதில், அயனாவரத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுவர்கள் இருவர், நேற்று முன்தினம் திருவேற்காடு போலீசாரிடம் சிக்கினர்.அவர்களிடமிருந்து, ஒரு இருசக்கர வாகனத்தை மட்டும் பறிமுதல் செய்த போலீசார், 'பணத்தை மீட்க முடியவில்லை' என கைவிரித்தனர். இதனால், ஆவடி தொடர் திருட்டில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் பணத்தையும், பொருட்களையும் இழந்து, சோகத்தில் உள்ளனர்.

எனவே, போலீஸ் உயர் அதிகாரிகள், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.கோவர்த்தினகிரியில், ஓராண்டாக மளிகை கடை நடத்துகிறேன். என் கடையிலும் மர்ம நபர்கள் புகுந்து, 28 ஆயிரம் ரூபாய், 100 கிராம் வெள்ளி கட்டி, 2 ஸ்வைப்பிங் மிஷின், 2 மொபைல் போன்களை திருடினர். குற்றவாளிகளை பிடித்தால், ஸ்வைப்பிங் மிஷினையாவது போலீசார் மீட்டுத் தருவர் என நம்பினேன். ஆனால், அவர்களிடமிருந்து, 1 ரூபாய் கூட மீட்க முடியவில்லை என கூறியுள்ளது, அதிர்ச்சியாக உள்ளது.கலீல், 26, பாதிக்கப்பட்டவர், கோவர்த்தினகிரி, ஆவடி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X