அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூரில் 2ம் முறையாக தி.மு.க., தொடர் வெற்றி

Added : மே 04, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : திருவள்ளூர் சட்டசபை தொகுதி வரலாற்றில், தொடர்ந்து, இரண்டாவது முறையாக, தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்று உள்ளார். திருவள்ளூர் சட்டசபை, 1951ம் ஆண்டு உருவானது. இங்கு, காங்., - தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என, மாறி, மாறி வெற்றி பெற்று உள்ளனர்.இருப்பினும், தொடர்ந்து, தொகுதியை தக்க வைத்த பெருமையை, கடந்த, 1971 மற்றும் 1977 ஆகிய இரண்டு தேர்தலில், தி.மு.க., எம்.எல்.ஏ., எம்.துரைராஜ்

திருவள்ளூர் : திருவள்ளூர் சட்டசபை தொகுதி வரலாற்றில், தொடர்ந்து, இரண்டாவது முறையாக, தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்று உள்ளார்.

திருவள்ளூர் சட்டசபை, 1951ம் ஆண்டு உருவானது. இங்கு, காங்., - தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என, மாறி, மாறி வெற்றி பெற்று உள்ளனர்.இருப்பினும், தொடர்ந்து, தொகுதியை தக்க வைத்த பெருமையை, கடந்த, 1971 மற்றும் 1977 ஆகிய இரண்டு தேர்தலில், தி.மு.க., எம்.எல்.ஏ., எம்.துரைராஜ் பெற்றார். அதன் பின், 1971, 1977 மற்றும் 1980 என, மூன்று தேர்தல்களில், அ.தி.மு.க., - பட்டாபிராமன் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.அதன் பின், வேறு யாரும், தொடர்ந்து வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன், அந்த சாதனையை மீண்டும் நிலை நிறுத்தி உள்ளார்.கடந்த, 2016ல், தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற அவர், தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும், 23 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X