அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர்

Added : மே 04, 2021
Share
Advertisement
பூந்தமல்லி : பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி, தான் போட்டியிட்ட, எம்.பி., - எம்.எல்.ஏ., தேர்தல் என, அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். பூந்தமல்லி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி, 1999- - 2009 வரை, ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., யாக இருந்தவர். பின், 2019ல் சட்டசபை இடைத்தேர்தலில், பூந்தமல்லி தொகுதியில் வெற்றி பெற்றார்.இதையடுத்து, எம்.பி., - எ.ம்.எல்.ஏ., என, தான்

பூந்தமல்லி : பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி, தான் போட்டியிட்ட, எம்.பி., - எம்.எல்.ஏ., தேர்தல் என, அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.

பூந்தமல்லி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி, 1999- - 2009 வரை, ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., யாக இருந்தவர். பின், 2019ல் சட்டசபை இடைத்தேர்தலில், பூந்தமல்லி தொகுதியில் வெற்றி பெற்றார்.இதையடுத்து, எம்.பி., - எ.ம்.எல்.ஏ., என, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றியடைந்த, பெருமை பெற்றுள்ளார்.இவர், கடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்று, பூந்தமல்லி சட்டசபை உறுப்பினராக பதவியேற்று, தொகுதி முழுதும் பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றி, மக்களின் ஆதரவை பெற்றுள்ளார்.

கூட்டணி கட்சியினர் ஆதரவு பலமாக இருந்ததாலும், 93 ஆயிரத்து, 134 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, மீண்டும் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் எஸ்.எக்ஸ். இராஜமன்னார், தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர் என்பதால், வெற்றி வாய்ப்பு பறிபோனதாக, அ.தி.மு.க.,வினர் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், கூட்டணி கட்சியினர் பக்கபலமாக இல்லாததால், தோல்வி அடைந்ததாக, பா.ம.க.,வினரும் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X