சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமீறல் நோயாளிக்கு அபராதம்

Added : மே 04, 2021
Share
Advertisement
மணலி : மணலியில், ஊர் சுற்றித் திரிந்த, தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு, அபராதம் விதித்த சுகாதார துறை அதிகாரிகள், அவரை தனிமைப்படுத்தும் வார்டுக்கு அனுப்பினர். சென்னை, மணலி, கண்ணியம்மன்பேட்டையில், 44 வயதுடைய ஆட்டோ ஓட்டுனருக்கு, 27ம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது தெரிய வந்தது.அறிகுறி ஏதுமில்லாததால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.இந்நிலையில்,

மணலி : மணலியில், ஊர் சுற்றித் திரிந்த, தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு, அபராதம் விதித்த சுகாதார துறை அதிகாரிகள், அவரை தனிமைப்படுத்தும் வார்டுக்கு அனுப்பினர்.

சென்னை, மணலி, கண்ணியம்மன்பேட்டையில், 44 வயதுடைய ஆட்டோ ஓட்டுனருக்கு, 27ம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது தெரிய வந்தது.அறிகுறி ஏதுமில்லாததால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட நபர், வீட்டிலிருந்து வெளியே சுற்றுவதாக, மணலி மண்டல, சுகாதார அதிகாரிகளுக்கு, தகவல் கிடைத்தது.அதன்படி, நேற்று காலை, மணலி போலீசார் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆனந்த் உள்ளிட்ட சுகாதார துறை அதிகாரிகள், வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டில் இல்லை.

அக்கம் பக்கத்தில் கேட்டதற்கு, ஆட்டோ எடுத்து சவாரி சென்றதாக கூறினர்.இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுகாதார துறை அதிகாரிகள், அங்கேயே, இரண்டு மணி நேரமாக காத்திருந்தனர். பின், வீட்டிற்கு திரும்பி வந்த அந்த நபரை கண்டித்ததுடன், 500 ரூபாய் அபராதமும் விதித்தனர்.மேலும், விதிமீறி வெளியே சுற்றித்திரிந்ததால், தனிமைப் படுத்தப்பட்ட வார்டுக்கு, வேனில் அழைத்து செல்லப்பட்டார்.வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நபர், நோய் பரவும் விதத்தில் வெளியே சுற்றினால், நிச்சயம் அபராதம் விதிக்கப்படுவதுடன், தனிமை வார்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என, சுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X