பொது செய்தி

தமிழ்நாடு

அவசரம் என்றால் மட்டும் முக கவசத்துடன் வெளியே வாங்க...

Added : மே 04, 2021
Share
Advertisement
திருத்தணி : அவசர தேவைக்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். அப்போது, கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும் என, வட்டார மருத்துவ அலுவலர் சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.திருத்தணி ஒன்றியம் மற்றும் நகரத்தில், கொரோனா தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய படுக்கை வசதி

திருத்தணி : அவசர தேவைக்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். அப்போது, கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும் என, வட்டார மருத்துவ அலுவலர் சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

திருத்தணி ஒன்றியம் மற்றும் நகரத்தில், கொரோனா தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய படுக்கை வசதி இல்லாததால், திருவள்ளூர், ஆவடி போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதுவரை, 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து திருத்தணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சந்திரன் கூறியதாவது:சில நாட்களாக, கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பாதிப்பு அறிகுறிகள் இருந்தால், உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லுங்கள்.

இனிவரும் நாட்களில் பொதுமக்கள்தங்களது அவசர தேவைக்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டும். அப்போது கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்து விழிப்புடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X