சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமீறிய தொழிற்சாலைக்கு அபராதம்

Added : மே 04, 2021
Share
Advertisement
மணலி : விதிமீறி செயல்பட்ட, சலுான் கடைக்கு, 'சீல்' வைத்த, மாநகராட்சி அதிகாரிகள், தொழிற்சாலைக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.மணலி மண்டலத்தில், தினசரி தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், மாநகராட்சி மற்றும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காத வர்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.அதன்படி, மணலி,

மணலி : விதிமீறி செயல்பட்ட, சலுான் கடைக்கு, 'சீல்' வைத்த, மாநகராட்சி அதிகாரிகள், தொழிற்சாலைக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.மணலி மண்டலத்தில், தினசரி தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், மாநகராட்சி மற்றும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காத வர்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.அதன்படி, மணலி, 20வது வார்டு, காமராஜர் சாலையில், விதிகளை மீறி, சலுான் கடை ஒன்று செயல்பட்டுள்ளது. தகவலறிந்து, நேற்று காலை, அங்கு சென்ற உதவி வருவாய் அலுவலர் திருபால், பாஸ்கர் உள்ளிட்டோர், கடையை மூடி, 'சீல்' வைத்தனர்.மேலும், சடையங்குப்பம் கிராமத்தில், முக கவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட, தனியார் ஸ்டீல் தொழிற்சாலைக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X