பொது செய்தி

தமிழ்நாடு

உயர் பதவிகளை பிடிக்க ஐ.பி.எஸ்.,கள் கடும் போட்டி

Added : மே 04, 2021
Share
Advertisement
தமிழக காவல் துறையில், டி.ஜி.பி., சட்டம் - -ஒழுங்கு, கூடுதல் டி.ஜி.பி., மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட, 'பவர்புல்' பதவிகளை பிடிக்க, ஐ.பி.எஸ்., அதிகாரிகளிடம் கடும் போட்டி நிலவுகிறது.தமிழகத்தில், ஆறாவது முறையாக, தி.மு.க., ஆட்சி அமைக்கிறது. முதல்வராக, ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். புதிய அரசு அமையும் போது, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம்.அந்த

தமிழக காவல் துறையில், டி.ஜி.பி., சட்டம் - -ஒழுங்கு, கூடுதல் டி.ஜி.பி., மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட, 'பவர்புல்' பதவிகளை பிடிக்க, ஐ.பி.எஸ்., அதிகாரிகளிடம் கடும் போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில், ஆறாவது முறையாக, தி.மு.க., ஆட்சி அமைக்கிறது. முதல்வராக, ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். புதிய அரசு அமையும் போது, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம்.அந்த வகையில், மாநில சட்டம் --- ஒழுங்கு டி.ஜி.பி., உளவுத்துறை ஐ.ஜி., மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்கு, புதியவர்கள் நியமிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.

அதேபோல, தற்போது சட்டம் - - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக உள்ள, திரிபாதியின் பதவி காலம், ஜூனில் முடிகிறது.அப்பதவிக்கு, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கரண் சின்ஹா, சைலேந்திர பாபு, சுனில்குமார் சிங், கந்தசாமி மற்றும் மத்திய அரசு பணியில் உள்ள சஞ்சய் அரோரா ஆகியோர், முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

சட்டம் - - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., பதவிக்கு, அம்ரேஸ் பூஜாரி, சந்தீப்ராய் ரத்தோர், ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் பதவியை பெற, கூடுதல் டி.ஜி.பி., ரவி மற்றும் சங்கர் ஜிவால் ஆகியோர் கடும் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.உளவுத் துறைக்கு, சங்கர் ஜிவால் நியமிக்கப்படலாம்.

தற்போது, உளவுத்துறை ஐ.ஜி.,யாக பணிபுரியும், ஈஸ்வரமூர்த்தி, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், தற்போது ஐ.ஜி.,யாக உள்ள சங்கர், ஜெயராம் மற்றும் அமல்ராஜ் ஆகியோர், கூடுதல் டி.ஜி.பி., யாக பதவி உயர்வு பெறும் நிலையில் உள்ளனர்.அதேபோல, டி.ஐ.ஜி.,க்கள் பாலகிருஷ்ணன், சுதாகர் உள்ளிட்ட, ஏழு பேரும் பதவி உயர்வு பட்டியலில் உள்ளனர்.

மூன்று டி.ஜி.பி., மற்றும் ஒன்பது எஸ்.பி., பணியிடங்களும் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, மத்திய அரசு பணிக்கு சென்ற ஐ.பி.எஸ்., அதிகாரிகள், மீண்டும் தமிழகத்தில் பணிபுரிய விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சட்டம் - -- ஒழுங்கு சீர்குலைந்து விடும் என்ற, குற்றச்சாட்டு உள்ளது. அதிலிருந்து, தி.மு.க., மீளும் வகையில், நேர்மையான அதிகாரிகள், அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், உயர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பதில், ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.அத்துடன், அவர்கள், 'கை' சுத்தமானவர்களா; பாலியல் குற்றச்சாட்டில் சிக்காதவர்களா என்பது குறித்த தகவல் சேகரிக்கும் பணியும் நடப்பதாக, காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X