சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐஸ் ஹவுஸ் வழக்கறிஞருக்கு மாநகராட்சி ஊழியர் மிரட்டல்

Added : மே 04, 2021
Share
Advertisement
ஐஸ்ஹவுஸ் : சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட, நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக, மாநகராட்சி ஊழியரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனியைச் சேர்ந்தவர் ஜெயசிம்மராஜா, 28; உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.மேலும் இவர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர்.கட்சியில்

ஐஸ்ஹவுஸ் : சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட, நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக, மாநகராட்சி ஊழியரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனியைச் சேர்ந்தவர் ஜெயசிம்மராஜா, 28; உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.மேலும் இவர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர்.கட்சியில் சேர்ந்த, மூன்றாவது மாதத்திலேயே, இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை விமர்சித்து, திருவல்லிக்கேணி, வி.ஆர்.பிள்ளை தெருவைச் சேர்ந்த, மாநகராட்சி ஊழியர் வினோத்குமார் என்பவர், சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.இதை அறிந்த ஜெயசிம்மராஜா, நேற்று முன்தினம் காலை, லாயிட்ஸ் காலனியில் உள்ள தருன் குப்தா என்பவரது வீட்டிற்கு வந்த வினோத்குமாரிடம், 'ஏன், என்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பினாய்...' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த வினோத்குமார், 'என்னை கேட்பதற்கு நீ யார்; உன்னை கொலை செய்து விடுவேன்' என மிரட்டி சென்றுள்ளார். இது குறித்து ஜெயசிம்மராஜா, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X