பொது செய்தி

தமிழ்நாடு

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை திறப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ச.சதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:'கொரோனா' வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பரவலைத் தொடர்ந்து, வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல, ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் கூட்டமாக

திருவள்ளூர் : புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ச.சதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:'கொரோனா' வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பரவலைத் தொடர்ந்து, வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல, ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் கூட்டமாக கூடுவதாக தெரிய வருகிறது.வெளிமாநில தொழிலாளர்கள், தொடர்ந்து தமிழகத்தில் தங்கி பணியாற்றிட, உகந்த சூழ்நிலை உருவாக்கி, அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லாமல் தொடர்ந்து பணிபுரிய, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது குறைகள், கோரிக்கை மற்றும் நிவாரணம் தேவைப்படின், தொழிலாளர் துறை சார்பில் தமிழகத்தில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.

எனவே, தமிழகத்தில் தங்கி பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள், 044 2432 1438 மற்றும் 2432 1408 ஆகிய எண்களை, காலை 8:00 - இரவு 8:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள், சுதா, தொழிலாளர் நல உதவி ஆணையர் - அமலாக்கம் - 94428 32516 .உதவி ஆய்வாளர்களான, செந்தில்குமார்- - 95975 77599, நாகராஜன் - 99401 97329, உஷா ராணி - 94447 68501 மற்றும் திருவள்ளூர் அலுவலகம் - 044 2766 7117 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X