சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபருக்கு 'குண்டாஸ்'

Added : மே 04, 2021
Share
Advertisement
திருத்தணி : திருத்தணி அடுத்த, காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வஜ்ஜிரவேல் மகன் உதயகுமார், 23. இவர் மீது, திருத்தணி போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல், மதுபாட்டில்கள் விற்பனை, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒரு வாரம் முன், உதயகுமார், ஒருவரை வழிமடக்கி தாக்கி, பணம் பறிக்க முயன்றதாக போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.இந்நிலையில், திருத்தணி போலீசார் அனுப்பிய

திருத்தணி : திருத்தணி அடுத்த, காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வஜ்ஜிரவேல் மகன் உதயகுமார், 23. இவர் மீது, திருத்தணி போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல், மதுபாட்டில்கள் விற்பனை, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.

ஒரு வாரம் முன், உதயகுமார், ஒருவரை வழிமடக்கி தாக்கி, பணம் பறிக்க முயன்றதாக போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.இந்நிலையில், திருத்தணி போலீசார் அனுப்பிய கடிதத்தின்படி, எஸ்.பி., அரவிந்தன், உதயகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அதை தொடர்ந்து, கலெக்டர் பொன்னையா, உதயகுமாரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்வதற்கு உத்தரவிட்டார். இதையடுத்து, உதயகுமார் குண்டர் சட்டத்தின் கீழ் செய்யப்பட்டார். இதற்கான நகல், புழல் சிறையில் உள்ள உதயகுமாரிடம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X