அரசியல் செய்தி

தமிழ்நாடு

நழுவியது 'ஹாட்ரிக்' வாய்ப்பு தோல்விக்கு காரணம் என்ன?

Added : மே 04, 2021
Share
Advertisement
திருவொற்றியூர் : சட்டசபை தேர்தலில், இரு முறை போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற, அ.தி.மு.க., வேட்பாளர் குப்பன், மூன்றாவது முறையாக போட்டியிட்டு, பல ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் தொகுதியில், தி.மு.க.,வில் கே.பி.சங்கர், அ.தி.மு.க.,வில் கே.குப்பன், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட, 20 பேர் போட்டியிட்டனர்.இதில்,

திருவொற்றியூர் : சட்டசபை தேர்தலில், இரு முறை போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற, அ.தி.மு.க., வேட்பாளர் குப்பன், மூன்றாவது முறையாக போட்டியிட்டு, பல ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் தொகுதியில், தி.மு.க.,வில் கே.பி.சங்கர், அ.தி.மு.க.,வில் கே.குப்பன், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட, 20 பேர் போட்டியிட்டனர்.இதில், அ.தி.மு.க., வேட்பாளர் குப்பன், ஏற்கனவே, இருமுறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, எம்.எல்.ஏ., ஆனார்.அதன்படி, 1991ம் ஆண்டில், முதன் முறையாக போட்டியிட்டு, 27 ஆயிரத்து, 322 ஓட்டுகள் வித்தியாசத்தில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட, டி.கே.பழனிசாமியை தோற்கடித்தார்.

மீண்டும், 2011ம் ஆண்டு, சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட குப்பன், 27 ஆயிரத்து, 291 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றி எம்.எல்.ஏ., ஆனார்.மூன்றாவது முறையாக இங்கு போட்டியிட்டவர், 37 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதற்கு, கட்சிக்குள் நடந்த உள்ளடி வேலையே காரணம் என கூறப்படுகிறது. அ.தி.மு.க.,விற்கு சாதகமான பல வார்டுகளில், சீமானுக்கு அதிக அளவில் ஓட்டுகள் விழுந்துள்ளன.மேலும், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் ஓட்டுகள் தி.மு.க.,விற்கு சாதகமாக இருந்தன.இதுபோன்ற காரணங்களால், இருமுறை சட்டசபை தேர்தலில் அபார வெற்றி கண்ட குப்பன், இம்முறை,'ஹாட்ரிக்' அடிக்காமல், பல ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், தோல்வியை தழுவியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X