துரைசாமி தோற்றது ஏன்? விசுவாசிகள் விளக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

துரைசாமி தோற்றது ஏன்? விசுவாசிகள் விளக்கம்

Added : மே 04, 2021
Share
சென்னை : சைதாப்பேட்டை தொகுதியில், ஏற்கனவே, எம்.எல்.ஏ., மற்றும் சென்னை மேயராக இருந்த சைதை துரைசாமி, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக, தி.மு.க.,வைச் சேர்ந்த மா.சுப்பிரமணியன் போட்டியிட்டு, 29 ஆயிரத்து, 408 ஓட்டுகள் வித்தியாசத்தில், இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். துரைசாமியின் கல்வி சேவை, பலரது உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இருந்தும், தோல்வி

சென்னை : சைதாப்பேட்டை தொகுதியில், ஏற்கனவே, எம்.எல்.ஏ., மற்றும் சென்னை மேயராக இருந்த சைதை துரைசாமி, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக, தி.மு.க.,வைச் சேர்ந்த மா.சுப்பிரமணியன் போட்டியிட்டு, 29 ஆயிரத்து, 408 ஓட்டுகள் வித்தியாசத்தில், இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

துரைசாமியின் கல்வி சேவை, பலரது உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இருந்தும், தோல்வி அடைய காரணம், அக்கட்சியினர் போதிய ஒத்துழைப்பு கிடைக்காததே என, அவரது ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.துரைசாமி சில காலம் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி இருந்ததும், அதனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடனான இடைவெளி அதிகரித்ததுமே இதற்கு காரணம் என்கின்றனர், சைதை தொகுதி அ.தி.மு.க.,வினர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், துரைசாமியுடன் கூடவே சென்று, பிரசாரத்தில் ஈடுபட்டாலும், விசுவாசமாக தேர்தல் பணி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதன் காரணமாகவே, அவர் தோல்வியை தழுவினார் என, அரவது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X