அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நோட்டா'விடம் வீழ்ந்த அ.ம.மு.க.,

Added : மே 04, 2021
Share
Advertisement
துறைமுகம் : துறைமுகம் தொகுதியில், அ.ம.மு.க., வேட்பாளர் சந்தானகிருஷ்ணன், நோட்டாவை விட குறைவான ஓட்டுகளை பெற்றார். துறைமுகம் தொகுதியில், தி.மு.க., சார்பில், பி.கே.சேகர் பாபு, அ.தி.மு.க., கூட்டணி பா.ஜ., சார்பில், வினோஜ் பி செல்வம், மக்கள் நீதி மய்யம் கூட்டணி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் கிச்சா ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில், அகமது பாசில், அ.ம.மு.க., சார்பில் சந்தான கிருஷ்ணன்

துறைமுகம் : துறைமுகம் தொகுதியில், அ.ம.மு.க., வேட்பாளர் சந்தானகிருஷ்ணன், நோட்டாவை விட குறைவான ஓட்டுகளை பெற்றார்.

துறைமுகம் தொகுதியில், தி.மு.க., சார்பில், பி.கே.சேகர் பாபு, அ.தி.மு.க., கூட்டணி பா.ஜ., சார்பில், வினோஜ் பி செல்வம், மக்கள் நீதி மய்யம் கூட்டணி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் கிச்சா ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில், அகமது பாசில், அ.ம.மு.க., சார்பில் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட்டனர்.துறைமுகம் தொகுதியில், சேகர்பாபு 59 ஆயிரத்து, 317 ஓட்டுகள் பெற்று, 27 ஆயிரத்து, 274 ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றார்.இதில், அ.ம.மு.க., 775 ஓட்டுகள் பெற்றது. இது, நோட்டாவில் பதிவான, 912 ஓட்டுகளை விடக் குறைவாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X