அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆவடி அமைச்சர் ராசி நாசருக்கு கைகூடுமா?

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை : புதிதாக உருவான ஆவடி தொகுதியில், இதற்கு முன் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற இருவர் அமைச்சர்களாக்கப்பட்ட நிலையில், தற்போது தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றுள்ள நாசருக்கும், அப்பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பின் போது, 2011ல் ஆவடி தொகுதி உதயமானது. அந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ஆவடியில் அ.தி.மு.க. சார்பில் அப்துல்ரஹீம் வெற்றி

சென்னை : புதிதாக உருவான ஆவடி தொகுதியில், இதற்கு முன் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற இருவர் அமைச்சர்களாக்கப்பட்ட நிலையில், தற்போது தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றுள்ள நாசருக்கும், அப்பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொகுதி மறுசீரமைப்பின் போது, 2011ல் ஆவடி தொகுதி உதயமானது. அந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ஆவடியில் அ.தி.மு.க. சார்பில் அப்துல்ரஹீம் வெற்றி பெற்றார்.அவருக்கு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின், 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் பாண்டியராஜன் வெற்றி பெற்றார். அவர், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால், ஆவடி தொகுதியில் வெற்றி பெறுபவருக்கு, அமைச்சர் ராசி கிடைக்கும் என, அனைத்து கட்சியினரும் ஆரூடம் கூறி வருகின்றனர்.

அதன்படி, ஆவடி தொகுதியின் மூன்றாவது எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க.,வின் சா.மு.நாசருக்கும், அமைச்சர் பதவி கிடைக்கும் என, அக்கட்சியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆவடி தி.மு.க.வினரின் இந்த எதிர்பார்ப்பு நடக்குமா என்பது, ஓரிரு நாளில் தெரியவரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X