அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., வெற்றி பறிபோனது எதனால்?

Added : மே 04, 2021
Share
Advertisement
-சோழிங்கநல்லுார், ஆலந்துார் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர்களின் தோல்விக்கு, மாவட்ட செயலர்களே காரணம் என, அந்த கட்சி விசுவாசிகள் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து, அ.தி.மு.க., விசுவாசிகள் கூறியதாவது:சோழிங்கநல்லுார் தொகுதி வேட்பாளர் கே.பி.கந்தனுக்கு மாவட்ட செயலர் பதவி கொடுத்த பின், பலம் பொருந்திய கட்சியாக இருந்த, அ.தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் ஆரம்பித்தது. கட்சியின் மூத்த

-சோழிங்கநல்லுார், ஆலந்துார் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர்களின் தோல்விக்கு, மாவட்ட செயலர்களே காரணம் என, அந்த கட்சி விசுவாசிகள் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து, அ.தி.மு.க., விசுவாசிகள் கூறியதாவது:சோழிங்கநல்லுார் தொகுதி வேட்பாளர் கே.பி.கந்தனுக்கு மாவட்ட செயலர் பதவி கொடுத்த பின், பலம் பொருந்திய கட்சியாக இருந்த, அ.தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் ஆரம்பித்தது. கட்சியின் மூத்த உறுப்பினர்களை அவர் புறந்தள்ளினார்.தன் கட்டுப்பாட்டில் உள்ள சோழிங்கநல்லுார், ஆலந்துார் தொகுதிகளில் அதிகாரத்துடனும், சுயநலத்துடனும் தகுதி இல்லாதவர்களுக்கு கட்சி பொறுப்புகளை வழங்கினார்.இதனால், கடும் அதிருப்தியில் இருந்த கட்சியினர், அதனை தேர்தலில் வெளிக்காட்டியதன் விளைவே தோல்விக்கு அச்சாரமாகிவிட்டது.

ஆலந்துார் தொகுதியில், நீயா நானா போட்டியில், கட்சியினரை கொம்பு சீவி விட்டதன் பலனாக, அத்தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதியின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X