இந்தியா

புதுச்சேரியில் ரங்கசாமி வரும் 9ம் தேதி பதவியேற்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி:புதுச்சேரியில், என்.ஆர். காங்., கட்சி தலைவர் ரங்கசாமி, வரும் 9ம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.புதுச்சேரியில் உள்ள, 30 சட்டசபை தொகுதிகளில், என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைத்து போட்டியிட்டன.நான்காவது முறைஇதில், என்.ஆர்.காங்., - 10, பா.ஜ., - ஆறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.காங்., - இரண்டு, தி.மு.க., - ஆறு, சுயேச்சைகள் - ஆறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.என்.ஆர்.காங்., -
 புதுச்சேரியில் ரங்கசாமி வரும் 9ம் தேதி பதவியேற்பு

புதுச்சேரி:புதுச்சேரியில், என்.ஆர். காங்., கட்சி தலைவர் ரங்கசாமி, வரும் 9ம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

புதுச்சேரியில் உள்ள, 30 சட்டசபை தொகுதிகளில், என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைத்து போட்டியிட்டன.நான்காவது முறைஇதில், என்.ஆர்.காங்., - 10, பா.ஜ., - ஆறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.காங்., - இரண்டு, தி.மு.க., - ஆறு, சுயேச்சைகள் - ஆறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஒப்பந்தப்படி, பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி அமைப்பதுடன், கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் உள்ளிட்ட பதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுஇருந்தது. இதன்படி, 10 இடங்களை பிடித்த என்.ஆர்.காங்., கட்சியின் தலைவர் ரங்கசாமி, நான்காவது முறையாக, முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு அடுத்த, 'பவர்புல்' பதவி, பா.ஜ., வைச் சேர்ந்த நமச்சிவாயத்திற்கு அளிக்கப்பட உள்ளது.

தவிர, பா.ஜ.,வுக்கு மேலும் ஒரு அமைச்சர், துணை சபாநாயகர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இந்நிலையில் பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, ராஜிவ் சந்திரசேகர் எம்.பி., ஆகியோர், என்.ஆர்.காங்., கட்சி தலைவர் ரங்கசாமியை, அவரது இல்லத்தில், நேற்று காலை சந்தித்து, ஆலோசனை நடத்தினர்.


துணை முதல்வர்

என்.ஆர்.காங்., கட்சி நிர்வாகிகள் கூறுகையில், 'முதல்வராக வரும், 9ம் தேதி பிற்பகல், 3:௦௦ மணிக்கு ரங்கசாமி பொறுப்பேற்க உள்ளார்' என்றனர்.யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், முதல்வர் மற்றும் ஐந்து அமைச்சர்கள் பதவி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் மற்றும் ஆறாவது அமைச்சர் பதவிக்கு, கவர்னர் மூலமாக மத்திய உள்துறையிடம் ஒப்புதல் கோரப்பட்டுஉள்ளது.

இந்நிலையில், என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி, கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தோற்ற பிரபலங்கள்புதுச்சேரி சட்டசபை தேர்தலில், 15 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 13 தொகுதி களில் தோல்வியை தழுவியது. முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், காங்., தலைவர் ஏ.வி.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் தோல்வியை தழுவினர்.அ.தி.மு.க.,வில், 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள், ஐந்து பேரும் தோல்வி அடைந்தனர். தி.மு.க.,வில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சிவகுமார் தோற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X