அரசியல் செய்தி

தமிழ்நாடு

15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தி.நகரை கைப்பற்றியது தி.மு.க.,

Added : மே 04, 2021
Share
Advertisement
தி.நகர் : தி.நகர் தொகுதியில், ஜெ.கருணாநிதி வெற்றி பெற்றதை அடுத்து, 15 ஆண்டுகளுக்கு பின், அங்கு, தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. வெறும், 137 ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வெற்றி வாய்ப்பை இழந்தது. சென்னை மாநகரின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் தி.நகர் சட்டசபை தொகுதியில், காங்கிரஸ், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என, பல கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்று வந்துள்ளன. 2001ல் நடந்த சட்டசபை

தி.நகர் : தி.நகர் தொகுதியில், ஜெ.கருணாநிதி வெற்றி பெற்றதை அடுத்து, 15 ஆண்டுகளுக்கு பின், அங்கு, தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. வெறும், 137 ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வெற்றி வாய்ப்பை இழந்தது.

சென்னை மாநகரின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் தி.நகர் சட்டசபை தொகுதியில், காங்கிரஸ், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என, பல கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்று வந்துள்ளன. 2001ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வை சேர்ந்த ஜெ. அன்பழகன் வெற்றி பெற்றார். அதன் பின், 2006 மற்றும் 2011 தேர்தல்களில், அ.தி.மு.க., வை சேர்ந்த கலைராஜன்; 2016ல், அ.தி.மு.க., வை சேர்ந்த சத்யநாராயணன் என, தொடர்ந்து, 15 ஆண்டுகளாக, தி.நகர் தொகுதியில், அ.தி.மு.க., ஆதிக்கம் செலுத்தி வந்தது.

இம்முறை, அ.தி.மு.க., சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ., வாக இருந்த சத்யநாராயணன் மற்றும் தி.மு.க., சார்பில் மறைந்த ஜெ. அன்பழகன் தம்பியும், தி.நகர் பகுதி செயலாளருமான ஜெ. கருணாநிதி ஆகியோர் போட்டியிட்டனர்.ஓட்டு எண்ணிக்கையின் போது, ஆரம்பம் முதல், கடைசி சுற்று வரை, இரு கட்சி வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவியது. ஒவ்வொரு சுற்றிலும் இழுபறி நிலையே காணப்பட்டது. கடைசி சுற்று முடிவில், தி.மு.க., வை சேர்ந்த ஜெ. கருணாநிதி, 56,035 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க., சேர்ந்த சத்யநாராயணன், 55,898 ஓட்டுகள் பெற்றதால், 137 ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, 15 ஆண்டுகளுக்கு பின், தி.நகர் தொகுதி, தி.மு.க., தன்வசப்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X