அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளச்சேரியில் வெற்றிக்கொடி நாட்டியது காங்.,

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை : வேளச்சேரி தொகுதியில், அ.தி.மு.க., - காங்., இடையே நடந்த போட்டியில் காங்., வேட்பாளர் வெற்றி பெற்றார்.அ.தி.மு.க., தோல்வி அடைந்ததற்கு, புதிய நிர்வாகிகள் அறிவிப்பும், 177வது வார்டு ஓட்டும் தான் காரணம் என, அ.தி.மு.க.,வினர் புலம்புகின்றனர். சென்னை மாவட்டத்தில், அ.தி.மு.க., வெற்றி பெறும் தொகுதியாக, வேளச்சேரி இருந்தது. காரணம், இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர், விரல் விட்டு

சென்னை : வேளச்சேரி தொகுதியில், அ.தி.மு.க., - காங்., இடையே நடந்த போட்டியில் காங்., வேட்பாளர் வெற்றி பெற்றார்.அ.தி.மு.க., தோல்வி அடைந்ததற்கு, புதிய நிர்வாகிகள் அறிவிப்பும், 177வது வார்டு ஓட்டும் தான் காரணம் என, அ.தி.மு.க.,வினர் புலம்புகின்றனர்.

சென்னை மாவட்டத்தில், அ.தி.மு.க., வெற்றி பெறும் தொகுதியாக, வேளச்சேரி இருந்தது. காரணம், இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர், விரல் விட்டு எண்ணும் அளவுக்கு கூட இல்லை.வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தான், காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இதனால், அ.தி.மு.க., எளிதாக வெற்றி பெறும் என, பேசப்பட்டது.ஆனால் காங்., வேட்பாளர், 4,357 ஓட்டு வித்தியாசத்தில், ஹசன் மவுலானா வெற்றி பெற்றார்.இந்த தொகுதியில், எட்டு வார்டுகள் உள்ளன. இதில், 177வது வார்டு, 650 தெருக்கள், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டது.

இந்த வார்டில் தான், அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் குடியிருக்கிறார்.தவறான அணுகுமுறை மறு சீரமைப்புக்கு பின், 2011ல் நடந்த முதல் தேர்தலில், 32 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில், அ.தி.மு.க., வென்றது. இதற்கு, 177வது வார்டு ஓட்டு தான் காரணம். அடுத்த, 2016 தேர்தலில், அசோக்குக்கு வழங்காமல், நீலாங்கரை முனுசாமிக்கு, 'சீட்' வழங்கப்பட்டது.இதில், 8,௦௦௦ ஓட்டு வித்தியாசத்தில், அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. இதற்கும், இதே வார்டு தான் காரணம். தற்போதைய தேர்தலில், 4,357 ஓட்டு வித்தியாசத்தில், அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. இதற்கும், 177வது வார்டு தான் காரணம்.

முதல், 10 சுற்றில், அ.தி.மு.க.,வின் கோட்டையாக கருதப்படும், 177வது வார்டில், காங்., வேட்பாளரே ஆச்சர்யப்படும் அளவுக்கு, அவர் முன்னணியில் இருந்தார்.தி.மு.க.,வுக்கு, 'சீட்' கிடைக்காத அதிருப்தி, காங்., இல்லாத தொகுதி, தொகுதிக்கே சம்பந்தம் இல்லாத வேட்பாளர் என்பதை கடந்து, காங்., வெற்றி பெற்றதை, பலரும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.அதே வேளையில், அ.தி.மு.க., தோல்விக்கு, வேட்பாளரின் அணுகுமுறையும், கட்சி எடுத்த சில முடிவுகளும் காரணம் என, அக்கட்சியினர் புலம்புகின்றனர்.இது குறித்து, அ.தி.மு.க.,வினர் கூறியதாவது: பிற பகுதியை விட, 177வது வார்டில் தான், அதிகம் தெரிந்த நபராக அசோக் உள்ளார். தேர்தலுக்கு, சில மாதத்திற்கு முன்பே, மாவட்ட செயலர் நியமிப்பதில், வேட்பாளர் அசோக், வேளச்சேரி பகுதி செயலர் மூர்த்தி இடையே கடும் போட்டி நிலவியது. போலீசாரின், உளவுத்துறை அறிக்கை, கட்சிக்கு திருப்தி அளிக்காததால், மூர்த்திக்கு பதவி வழங்க கட்சி முன் வரவில்லை.

மாறாக, தேர்தல் அறிவிப்புக்கு, ஒரு மாதத்திற்கு முன், மயிலாப்பூர், வேளச்சேரி தொகுதியை மையப்படுத்தி, மாவட்ட செயலராக அசோக் நியமிக்கப்பட்டார். அதில் இருந்தே, இருவருக்கும் ஏழாம் பொருத்தம். அடுத்து, தேர்தல் பிரசார நேரத்தில், மூர்த்தியிடம் இருந்த பகுதி செயலர் பதவி பறிக்கப்பட்டு, இரண்டு பகுதி செயலர் மற்றும் 19 வட்ட செயலர்கள் நியமிக்கப்பட்டனர். நிராகரிப்புஇதில், 177வது வார்டுக்கு, நான்கு வட்ட செயலர். மூத்த நிர்வாகிகள் பலரை, ஓரம் கட்டியதுடன், தேர்தல் யுக்திக்கு அவர்கள் பேச்சை கேட்கவில்லை. இளைஞர்கள் தேவை தான்; அதற்காக, பல தேர்தல்களில் பணிபுரிந்த மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்களை ஓரம் கட்டுவது நியாயமா? மூர்த்தியும் தேர்தல் பணி செய்யவில்லை; பல கட்சி முன்னோடிகளும் ஒதுங்கி இருந்தனர். தேர்தலுக்கு பின், புதிய நிர்வாகிகள் பதவியை அறிவித்திருந்தால், வேளச்சேரி தொகுதி இந்நேரம் அ.தி.மு.க., வசம் இருந்திருக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X