சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழனிசாமி., வெற்றி சான்றில் ஆண்டு மாறியதால் குழப்பம்

Added : மே 04, 2021
Share
Advertisement
இடைப்பாடி:இடைப்பாடி சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்ற, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு வழங்கிய சான்றிதழில், ஆண்டு, 2017 என தவறாக குறிப்பிட்டதால், வேறு சான்றிதழ் வழங்கப்பட்டது.தமிழகத்தில் ஏப்., 6ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இடைப்பாடி தொகுதியில், தேர்தல் அலுவலராக, சேலம் மாவட்ட கலால் உதவி ஆணையர் தனலிங்கம் நியமிக்கப்பட்டு இருந்தார்.அ.தி.மு.க., சார்பில் முதல்வராக இருந்த இ.பி.எஸ்.,
பழனிசாமி., வெற்றி சான்றில் ஆண்டு மாறியதால் குழப்பம்

இடைப்பாடி:இடைப்பாடி சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்ற, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு வழங்கிய சான்றிதழில், ஆண்டு, 2017 என தவறாக குறிப்பிட்டதால், வேறு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் ஏப்., 6ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இடைப்பாடி தொகுதியில், தேர்தல் அலுவலராக, சேலம் மாவட்ட கலால் உதவி ஆணையர் தனலிங்கம் நியமிக்கப்பட்டு இருந்தார்.அ.தி.மு.க., சார்பில் முதல்வராக இருந்த இ.பி.எஸ்., தி.மு.க., சார்பில் சம்பத்குமார் உள்ளிட்ட, 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது.

இதில், பழனிசாமி., 93, ஆயிரத்து, 802 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழ், பழனிசாமியின் முகவர் தங்கமணியிடம் வழங்கப்பட்டது.தேர்தல் அலுவலர் தனலிங்கம் வழங்கிய சான்றிதழில் தேதி, 2.05.2017 என, எழுதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த சான்றிதழ் செல்லுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.

இது குறித்து, தேர்தல் அலுவலர் தனலிங்கம் கூறுகையில், ''தேர்தல் அலுவலர் கையொப்பம் இட்ட இடத்தில், சரியாக, 2.5.2021 எனவும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடம், தேதியில் தவறாக, 2.5.2017 எனவும் எழுதப்பட்ட சான்றிதழ் திரும்ப பெறப்பட்டு, திருத்தப்பட்ட சான்றிதழ் வழங்கி விட்டேன். திருத்தப்பட்ட சான்றிதழை, தேர்தல் கமிஷனுக்கும் அனுப்பி விட்டோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X