அரசியல் செய்தி

தமிழ்நாடு

தோல்வியுற்ற பெண் வேட்பாளர்

Added : மே 04, 2021
Share
Advertisement
ஆத்துார்:'பணத்துக்காக தவிர, வேறு எதற்கும் கட்சியினர் வாய் திறக்கவில்லை' என, கெங்கவல்லி தொகுதியில் தோல்வி அடைந்த, தி.மு.க., வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, 'வாட்ஸ் ஆப்'பில் பதிவிட்ட தகவலால், அக்கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி - தனி தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, 7,361 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
 தோல்வியுற்ற பெண் வேட்பாளர்

ஆத்துார்:'பணத்துக்காக தவிர, வேறு எதற்கும் கட்சியினர் வாய் திறக்கவில்லை' என, கெங்கவல்லி தொகுதியில் தோல்வி அடைந்த, தி.மு.க., வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, 'வாட்ஸ் ஆப்'பில் பதிவிட்ட தகவலால், அக்கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி - தனி தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, 7,361 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மாவட்ட செயலர், ரேகா பிரியதர்ஷினியின், 'வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்' பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:இனி வருங்காலங்களிலாவது, வேட்பாளரும் ஒரு உயிருள்ள மனுஷ ஜென்மம் தான்; ஏ.டி.எம்., இல்ல. இந்த கட்சியால் எவ்வளவு பலன் அனுபவிச்சிருப்போம். இந்த கட்சிக்கு பணம் வாங்காம, துளியாவது வேலை செய்யணும்; கொஞ்சம் செய்யுங்க கழக கண்மணிகளே...

தனி மனிதனாக தளபதி போராடினார்.மாவட்டச் செயலர், தொகுதி பொறுப்பாளர் தங்களது வயது, உடல்நிலையை பொருட்படுத்தாமல் கஷ்டப்பட்டாங்க. ஆனால், கட்சிக்காரங்க நெஞ்சுல கைய வச்சு சொல்லுங்க...

பணத்துக்காக தவிர, வேறு எதுக்காச்சும் வாய திறந்தீங்களா என்று.கொங்கு மண்டலம் உண்மையா உழைத்த நல்ல உள்ளங்களும் இருக்காங்க. அவங்க காலுல விழுந்து நன்றி சொல்கிறேன். கொங்கு மண்டலத்துல தோக்குறோம்னா அது நம்மால் மட்டுமே, உண்மையா இருங்க, கட்சி தலைவருக்கு மட்டுமாவது உண்மையா இருங்கள்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், அவரது முகநுால் பக்கத்தில், 'என் மீது நம்பிக்கை வைத்து, வெற்றி பெற்று வரும் படி கட்சி தலைவர் வாழ்த்தி அனுப்பினார். ஆனால், ஜாதி உணர்வு மட்டுமே ஓங்கி இருக்கும் பெருமை மிகுந்த சேலம் மாவட்டத்தில், என்னால் ஆன அத்தனை உழைப்பையும் கொட்டி பணியாற்றினேன். ஆனாலும், வெற்றி இலக்கை எட்டமுடியவில்லை' என்று குறிப்பிட்டு உள்ளார்.நேற்று மாலை, 4:00 மணிக்கு மேல், இந்த பதிவுகளை நீக்கம் செய்துள்ளார். தோல்வியடைந்த ரேகா பிரியதர்ஷினி, சொந்த கட்சியினர் மீதே பழி போட்டு பதிவிட்டுள்ள தகவல், தி.மு.க., வட்டாரத்தில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X