அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுவாச உபகரணங்கள் நிறுவப்படும் பா.ஜ., வானதி சீனிவாசன் தகவல்

Added : மே 04, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோவை:''கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில், கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், சுவாச உபகரணங்கள் நிறுவப்படும்,'' என, வானதி சீனிவாசன் கூறினார்.கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனுக்கு, கோவை மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் தொண்டர்கள் நேற்று வரவேற்பு அளித்தனர். அப்போது, நிருபர்களிடம் அவர்
 சுவாச உபகரணங்கள் நிறுவப்படும் பா.ஜ., வானதி சீனிவாசன் தகவல்

கோவை:''கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில், கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், சுவாச உபகரணங்கள் நிறுவப்படும்,'' என, வானதி சீனிவாசன் கூறினார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனுக்கு, கோவை மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் தொண்டர்கள் நேற்று வரவேற்பு அளித்தனர். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:எந்தெந்த வகையில், மத்திய அரசின் உதவிகளை பெற முடியுமோ, அந்த வகையில் மாநில வளர்ச்சிக்கு பங்காற்றுவோம்.

தேர்தல் அறிக்கையில் சொன்னதை எல்லாம், மாநில அரசின் ஒத்துழைப்புடன், மத்திய அரசின் உதவியுடன் செய்து கொடுப்பேன்.கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால், எதிர் வரும் நாட்களில் முன்னெச்சரிக்கை அடிப்படையிலும் மக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் நோக்கிலும், நகரின் முக்கிய பகுதிகளில் சுவாச உபகரணங்கள் - இன்ஹெலிங் கருவிகள் - நிறுவப்படும். இவை, மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இது குறித்து, மாநகராட்சி கமிஷனருடன் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறேன். இதை தயார் செய்து பொருத்தும் பணியை, கோவையில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கவும் முடிவு செய்திருக்கிறேன். மக்களுக்கான உதவி செய்வதைத்தான், இந்த நேரத்தில் வெற்றி கொண்டாட்டமாக பார்க்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
velan - california,யூ.எஸ்.ஏ
04-மே-202120:32:30 IST Report Abuse
velan இன்று முதல் இவர்களது பிரகிரஸ் ரிப்போர்ட் பாப்போம் ....ஐந்து வருடம் முடிந்தால் இவர்கள் சொல்வது மாநில அரசு தான் இங்கு வளர்ச்சி திட்டத்தை கொண்டுவரமுடியாததற்கு காரணம் .. எனவே மாநிலத்திலும் எங்கள் ஆட்சி வந்தால் தான் சாத்தியம் என்பது ஐந்து வருடங்கள் இவர்கள் கொடுக்கப்போகும் ஒத்துழைப்பு புதுசேரிக்கு கொடுத்த ஒத்துழைப்போடு மிக அதிகமாக இருக்கும்
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
04-மே-202118:09:54 IST Report Abuse
J. G. Muthuraj 'நிறுவப்படும்' 'செய்து தரப்படும்' இந்த 'டும்' டும்' வார்த்தைகளினால் பிரயோஜனமில்லை.....இரண்டாவது அலை வந்து இரண்டு மாதங்களாகின்றன .........இவுக இப்பதான் முடிவு எடுத்துக்கிறார்களாம்... டில்லியிலிருந்து உதவி வாங்கி தருவார்களாம்.....கலர், காலரா ரீல்கள்......
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
04-மே-202116:29:41 IST Report Abuse
Srinivas ஒரு துரும்பை கிள்ளி போட்டால் போதும் கூட்டமா வந்துடுவானுங்க.... ஊளையிட...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X