சுவாச உபகரணங்கள் நிறுவப்படும் பா.ஜ., வானதி சீனிவாசன் தகவல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுவாச உபகரணங்கள் நிறுவப்படும் பா.ஜ., வானதி சீனிவாசன் தகவல்

Added : மே 04, 2021 | கருத்துகள் (8)
Share
கோவை:''கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில், கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், சுவாச உபகரணங்கள் நிறுவப்படும்,'' என, வானதி சீனிவாசன் கூறினார்.கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனுக்கு, கோவை மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் தொண்டர்கள் நேற்று வரவேற்பு அளித்தனர். அப்போது, நிருபர்களிடம் அவர்
 சுவாச உபகரணங்கள் நிறுவப்படும் பா.ஜ., வானதி சீனிவாசன் தகவல்

கோவை:''கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில், கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், சுவாச உபகரணங்கள் நிறுவப்படும்,'' என, வானதி சீனிவாசன் கூறினார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனுக்கு, கோவை மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் தொண்டர்கள் நேற்று வரவேற்பு அளித்தனர். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:எந்தெந்த வகையில், மத்திய அரசின் உதவிகளை பெற முடியுமோ, அந்த வகையில் மாநில வளர்ச்சிக்கு பங்காற்றுவோம்.

தேர்தல் அறிக்கையில் சொன்னதை எல்லாம், மாநில அரசின் ஒத்துழைப்புடன், மத்திய அரசின் உதவியுடன் செய்து கொடுப்பேன்.கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால், எதிர் வரும் நாட்களில் முன்னெச்சரிக்கை அடிப்படையிலும் மக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் நோக்கிலும், நகரின் முக்கிய பகுதிகளில் சுவாச உபகரணங்கள் - இன்ஹெலிங் கருவிகள் - நிறுவப்படும். இவை, மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இது குறித்து, மாநகராட்சி கமிஷனருடன் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறேன். இதை தயார் செய்து பொருத்தும் பணியை, கோவையில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கவும் முடிவு செய்திருக்கிறேன். மக்களுக்கான உதவி செய்வதைத்தான், இந்த நேரத்தில் வெற்றி கொண்டாட்டமாக பார்க்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X