சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., வெற்றி கொண்டாட்டம்: நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்

Added : மே 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., வரவேற்பு கூட்டத்தில், 'ஆம்புலன்ஸ்' செல்ல வழி விடாமல் நெரிசல் ஏற்பட்டதால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் தொகுதியில், வெற்றி பெற்ற தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரன், நேற்று காலை, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, சென்னைக்கு சென்றார்.அப்போது, கட்சியினர்பட்டாசு வெடித்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து
 தி.மு.க., வெற்றி கொண்டாட்டம்: நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்

குன்னுார்:குன்னுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., வரவேற்பு கூட்டத்தில், 'ஆம்புலன்ஸ்' செல்ல வழி விடாமல் நெரிசல் ஏற்பட்டதால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் தொகுதியில், வெற்றி பெற்ற தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரன், நேற்று காலை, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, சென்னைக்கு சென்றார்.அப்போது, கட்சியினர்பட்டாசு வெடித்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். 100க்கும் மேற்பட்ட கட்சியினர் சால்வை அணிவிக்க, முண்டியடித்தனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கட்சியினர் முக கவசம் அணியாமல் இருந்தனர். ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், நோயாளியுடன் வந்த ஆம்புலன்சும் சிக்கிக் கொண்டது.அப்போது, போலீசார் ஆம்புலன்சுக்கு வழிவிட கூறியும், கட்சியினர் கேட்க வில்லை. 'வெற்றி பெற்ற முதல் நாளிலேயே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறிய அறிவுரையை கட்சியினர் மதிக்கவில்லை' என, மற்றவர்கள் புலம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
08-மே-202117:26:08 IST Report Abuse
jagan "தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறிய அறிவுரையை " இங்க பூதம் தானே கிணறு வெட்டுது
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
04-மே-202116:39:11 IST Report Abuse
r.sundaram இன்னமும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது பாருங்கள். நாலாயிரத்து ஐநூறு வழக்குகள் என்னவாயிற்று என்று தெரிய வில்லை. அந்த வழக்குகள் இனிமேல் விசாரிக்கப்படுமா என்றும் தெரிய வில்லை. நடந்த அந்தமாதிரி விஷயங்கள் நிச்சயம் திரும்பவும் தொடரும் என்று தெரிகிறது, இன்றே அதன் ஆரம்பமும் கண்ணுக்கு தெரிகிறது. பணம் வாங்க்கிக்கொண்டு ஓட்டுப்போட்டு மக்கள் எல்லோரும் தங்களது சொத்தையே விற்க வேண்டி வந்தாலும் வரலாம், இல்லாவிட்டால் சொத்து அவர்களது அல்ல.
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
04-மே-202115:19:36 IST Report Abuse
Dr. Suriya தலைவரு என்ன சொல்லுவாருன்னு அவங்க தொண்டருக்கு தெரியாதா என்ன..... செய்யாதேன்னு சொன்னா செய்யுன்னு அர்த்தம் அது கட்டுமர காலத்திலிருந்தே உடன் பொறுப்புகளுக்கு தெரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X