அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாமனாருக்கு பின் வென்ற மருமகன்

Added : மே 04, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:பேராவூரணி சட்டசபை தொகுதியில், 54 ஆண்டுகளுக்கு பின், தி.மு.க., வென்ற நிலையில், மாமனாருக்கு பின், தொகுதியை மருமகன் தக்க வைத்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தொகுதியாக அறிவிக்கப்பட்ட, 1967ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பரான கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, 35, ஆயிரத்து, 505 ஓட்டுகள் பெற்று வெற்றி

தஞ்சாவூர்:பேராவூரணி சட்டசபை தொகுதியில், 54 ஆண்டுகளுக்கு பின், தி.மு.க., வென்ற நிலையில், மாமனாருக்கு பின், தொகுதியை மருமகன் தக்க வைத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தொகுதியாக அறிவிக்கப்பட்ட, 1967ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பரான கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, 35, ஆயிரத்து, 505 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதன்பின், இங்கு தி.மு.க., வெற்றி பெறவில்லை. பெரும்பாலும், கூட்டணி கட்சிகளுக்கே வழங்கியது. இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தியின் மருமகனுமான அசோக்குமார், 23 ஆயிரத்து, 503 ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் திருஞானசம்பந்தத்தை தோற்கடித்தார்.இதனால், 54 ஆண்டுகளுக்கு பின், பேராவூரணி தொகுதியில் தி.மு.க., வெற்றி பெற்று இருப்பதாக, அக்கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X