அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆண்டிபட்டியில் 2வது முறையாக தம்பியை வென்ற அண்ணன்

Added : மே 04, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி:தேனிமாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் தி.மு.க., வேட்பாளரான அண்ணன் மகாராஜன் அ.தி.மு.க., வேட்பாளரான தம்பி லோகிராஜனை மீண்டும் தோற்கடித்தார்.இத்தொகுதியில் 2019ல் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க.சார்பில் மகாராஜன் 65 அ.தி.மு.க.சார்பில் அவரது தம்பி லோகிராஜன் 63 ஆகியோர் போட்டியிட்டனர். மகாராஜன் தம்பியைவிட 12 ஆயிரத்து 323 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். அ.ம.மு.க., சார்பில்

ஆண்டிபட்டி:தேனிமாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் தி.மு.க., வேட்பாளரான அண்ணன் மகாராஜன் அ.தி.மு.க., வேட்பாளரான தம்பி லோகிராஜனை மீண்டும் தோற்கடித்தார்.

இத்தொகுதியில் 2019ல் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க.சார்பில் மகாராஜன் 65 அ.தி.மு.க.சார்பில் அவரது தம்பி லோகிராஜன் 63 ஆகியோர் போட்டியிட்டனர். மகாராஜன் தம்பியைவிட 12 ஆயிரத்து 323 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். அ.ம.மு.க., சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் 28 ஆயிரத்து 313 ஓட்டுக்கள் பெற்றார்.

2021 சட்டசபை தேர்தலில் சம்பந்தப்பட்ட கட்சிகள் சார்பில் அண்ணன் தம்பி வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதில் தி.மு.க., வேட்பாளர் மகாராஜன் 93 ஆயிரத்து 541 ஓட்டுக்களும் அவரது தம்பி அ.தி.மு.க. வேட்பாளர் லோகிராஜன் 85 ஆயிரத்து மூன்று ஓட்டுக்களும் பெற்றனர். மகாராஜன் லோகிராஜனை விட 8538 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று 2 வது முறையாக வெற்றி பெற்றார். இம்முறையும் அ.ம.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெயக்குமார் 11,896 ஓட்டுக்கள் பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X