தொலைபேசி தகவல் பதிவு வழக்கு தடை கோரும் ஐ.பி.எஸ்., அதிகாரி

Added : மே 04, 2021
Share
Advertisement
மும்பை:தொலைபேசி தகவல்களை பதிவு செய்த வழக்கில், மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி, தென் மண்டல மத்திய ரிசர்வ் போலீஸ் படை கூடுதல், டி.ஜி.பி.,யான ஐ.பி.எஸ்., அதிகாரி ராஷ்மி சுக்லா, மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்து
 தொலைபேசி தகவல் பதிவு வழக்கு தடை கோரும் ஐ.பி.எஸ்., அதிகாரி

மும்பை:தொலைபேசி தகவல்களை பதிவு செய்த வழக்கில், மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி, தென் மண்டல மத்திய ரிசர்வ் போலீஸ் படை கூடுதல், டி.ஜி.பி.,யான ஐ.பி.எஸ்., அதிகாரி ராஷ்மி சுக்லா, மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது.புகார்இம்மாநில உளவுத்துறை தலைவராக பணியாற்றிய மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி ராஷ்மி சுக்லா, தற்போது ஐதராபாதில் தென் மண்டல சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், கூடுதல் டி.ஜி.பி.,யாக உள்ளார்.

இவர், மும்பை உளவுத்துறையில் பணியில் இருந்தபோது, சிவசேனா தலைமையிலான ஆளும்கட்சி தலைவர்களின் தொலைபேசி அழைப்புகள், முறைகேடாக பதிவு செய்யப் பட்டதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக, மஹாராஷ்டிரா தலைமைச் செயலர் விசாரணை நடத்தி, அரசின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக, ராஷ்மி சுக்லாவுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்தது மற்றும் ரகசிய தகவல்களை கசியவிட்டது தொடர்பாக, மாநில உளவுத் துறை புகாரின் அடிப்படையில், மும்பை, 'சைபர் கிரைம்' போலீசார், அடையாளம் தெரியாத நபர் மீது, வழக்கு பதிவு செய்தனர்.இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, ராஷ்மி சுக்லாவுக்கு இரு முறை சம்மன் அனுப்பப்பட்டது.


வழக்குபதிவு

இந்நிலையில், சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில், மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக்கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில், ராஷ்மி சுக்லா தரப்பில் நேற்று தாக்கலான 'ரிட்' மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மஹாராஷ்டிராவில், போலீஸ் அதிகாரி நியமனங்களில் அமைச்சர்கள், அரசியல் கட்சியினரின் ஊழல்களை, ராஷ்மி சுக்லா அம்பலப்படுத்தினார். இதனால், கடமை தவறாது பணியாற்றிய அவர் மீது, முறைகேடான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதன் அடுத்தகட்டமாக, உளவுத்துறை புகார் மீது, மும்பை சைபர் கிரைம் போலீசார், முறைகேடாக வழக்குபதிவு செய்துள்ளனர்.இந்த வழக்கில், அவரை கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது. எனவே, வழக்கில் போலீசாரின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X