85 பறிகொடுத்த இடதுசாரி கூட்டணி

Added : மே 04, 2021
Share
Advertisement
கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், இடதுசாரிகள் தலைமையிலான மூன்றாவது அணி, 85 சதவீத தொகுதிகளில், 'டிபாசிட்' இழந்தது. காங்., ராகுல் பிரசாரம் செய்த இரண்டு தொகுதிகளிலும், அந்த கட்சி, டிபாசிட் இழந்து படு தோல்வியை சந்தித்துள்ளது.மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளில், 292 தொகுதிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில், 213 தொகுதிகளில், மம்தா தலைமையிலான

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், இடதுசாரிகள் தலைமையிலான மூன்றாவது அணி, 85 சதவீத தொகுதிகளில், 'டிபாசிட்' இழந்தது. காங்., ராகுல் பிரசாரம் செய்த இரண்டு தொகுதிகளிலும், அந்த கட்சி, டிபாசிட் இழந்து படு தோல்வியை சந்தித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளில், 292 தொகுதிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில், 213 தொகுதிகளில், மம்தா தலைமையிலான திரிணமுல் காங்., அமோக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

இடதுசாரிகள் தலைமையில், காங்கிரஸ், இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியாக தேர்தலைச் சந்தித்தன.இதில், இடதுசாரிகள் போட்டியிட்ட, 170 தொகுதிகளில், 21 தொகுதிகளில் மட்டுமே டிபாசிட் கிடைத்துள்ளது.காங்., போட்டியிட்ட, 91 தொகுதிகளில், 11 தொகுதிகளில் மட்டுமே டிபாசிட் பெற்றது.

30 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய மதச்சார்பற்ற முன்னணி, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. 10 தொகுதியில் டிபாசிட் தக்க வைத்தது.ஒட்டு மொத்தமாக, மூன்றாவது அணி போட்டியிட்ட, 292 தொகுதிகளில், 85 சதவீத தொகுதிகளில் டிபாசிட் இழந்துள்ளது. மேற்கு வங்கத்தின், மட்டிகரா நக்சல்பாரி மற்றும் கோல்போக்கர் ஆகிய தொகுதிகளில், கடந்த, 2006 - 2016 வரை காங்., வெற்றி பெற்றது.

இந்த இரு தொகுதிகளிலும், காங்., - எம்.பி., ராகுல், இம்முறை நேரடியாக பிரசாரம் மேற்கொண்டார். இந்த இரு தொகுதிகளிலுமே, காங்., டிபாசிட் இழந்தது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், காங்., 2.94 சதவீதமும், இடதுசாரிகள், 5 சதவீதமும் ஓட்டுகளை பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X