சிறையில் இருந்தபடி வெற்றி அசாம் வேட்பாளர் அபாரம்

Added : மே 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சிவ்சாகர்:அசாமில், சிறையில் இருந்தபடி, தேர்தலில் வெற்றிபெற்ற முதல் நபர் என்ற பெருமையை, ரைஜோர் தள கட்சித் தலைவர் பெற்றுஉள்ளார்.அசாமில், சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று முன்தினம் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பா.ஜ., கூட்டணி, 75 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றுள்ளது. எனினும், பா.ஜ.,வை வீழ்த்தி, ஒரு வேட்பாளர் பெற்ற வெற்றி, அனைவரையும் திரும்பிப்
 சிறையில் இருந்தபடி வெற்றி அசாம் வேட்பாளர் அபாரம்

சிவ்சாகர்:அசாமில், சிறையில் இருந்தபடி, தேர்தலில் வெற்றிபெற்ற முதல் நபர் என்ற பெருமையை, ரைஜோர் தள கட்சித் தலைவர் பெற்றுஉள்ளார்.

அசாமில், சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று முன்தினம் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பா.ஜ., கூட்டணி, 75 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றுள்ளது. எனினும், பா.ஜ.,வை வீழ்த்தி, ஒரு வேட்பாளர் பெற்ற வெற்றி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து உள்ளது.கடந்த, 2019ல், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய, சமூக ஆர்வலரான அகில் கோகோய், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு, ரைஜோர் தளம் என்ற கட்சியை துவக்கினார். இந்த சட்டசபை தேர்தலில், சிவ்சாகர் தொகுதியில், அகில் கோகோய் போட்டியிட்டார். சிறையில் இருப்பதால், அவரால் பிரசாரங்களில் ஈடுபட வெளியே வர முடியாமல் இருந்தது. எனவே, சிறையில் இருந்தபடி, மக்களுக்காக கடிதங்களை எழுதி, பிரசாரம் செய்து வந்தார். தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அகில் கோகோய், 57 ஆயிரத்து, 219 ஓட்டுகள் பெற்று, அமோக வெற்றிபெற்றுள்ளார்.அசாமில், சிறையில் இருந்தபடி, தேர்தலில் வெற்றிபெற்ற முதல் நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
04-மே-202114:55:33 IST Report Abuse
Raman எங்கே சங்கிகள்.. இந்த மாதிரி செய்திக்கு பதில் சொல்ல வக்கு இருக்கா ?
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-மே-202115:56:34 IST Report Abuse
Malick Rajaஇதுக்கெல்லாம் பதில்தருவது இல்லை ..தரமுடியாதநிலை .. கம்ம்முனு போயிடுவாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X