பொது செய்தி

இந்தியா

அடுத்த ஆண்டு இறுதிக்குள் பிரதமருக்கு புதிய இல்லம் தயார்

Added : மே 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:'புதிய பார்லி., கட்டடத் துக்கான சுற்றுச்சூழல் அனு மதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, திட்டத்தின் ஒரு பகுதியான, பிரதமரின் புதிய இல்லம், அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் தயாராகிவிடும்' என தகவல் வெளியாகி உள்ளது.டில்லியில், ஜனாதிபதி மாளிகை முதல், 'இந்தியா கேட்' வரையிலான, 4 கி.மீ., துாரத்தை புதுப்பிப்பது, நவீன வசதிகளுடன் கூடிய புதிய பார்லி., கட்டடம் கட்டுவது, பிரதமர்

புதுடில்லி:'புதிய பார்லி., கட்டடத் துக்கான சுற்றுச்சூழல் அனு மதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, திட்டத்தின் ஒரு பகுதியான, பிரதமரின் புதிய இல்லம், அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் தயாராகிவிடும்' என தகவல் வெளியாகி உள்ளது.

டில்லியில், ஜனாதிபதி மாளிகை முதல், 'இந்தியா கேட்' வரையிலான, 4 கி.மீ., துாரத்தை புதுப்பிப்பது, நவீன வசதிகளுடன் கூடிய புதிய பார்லி., கட்டடம் கட்டுவது, பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதிக்கு புதிய இல்லம் கட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கு, 'சென்ட்ரல் விஸ்டா' திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.முடக்கம்இத்திட்டத்திற்காக, 13 ஆயிரத்து, 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமான ஒப்பந்தம், 'டாடா' குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுமானப் பணியில், 46 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர்.வரும், 2024க்குள் மொத்த பணிகளையும் முடிக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. எனவே, திட்டத்துக்கான பணிகள் விரைவுபடுத்தப் பட்டு வருகின்றன.கொரோனா இரண்டாவது அலை காரணமாக, டில்லியில் அனைத்து பணிகளும் முடக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், 'சென்ட்ரல் விஸ்டா' திட்டம், அத்தியாவசிய தேவை அடிப்படையில் வருவதை அடுத்து, இத்திட்ட பணிகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடக்கின்றன.தகவல்இந்த திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி, சமீபத்தில் வழங்கப்பட்டது.'கொரோனா இரண்டா வது அலை உச்சத்தில் உள்ள நேரத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து, புதிய கட்டடங்கள் கட்டுவது அவசியமற்றது' என, எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் ஒரு பகுதியான, துணை ஜனாதிபதியின் புதிய இல்லம் கட்டுமான பணிகள், அடுத்த ஆண்டு, மே மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் புதிய இல்லம், சிறப்பு பாதுகாப்பு படையினரின் தலைமையகம், மூத்த அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் ஆகியவை, அடுத்த ஆண்டு, டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
04-மே-202108:36:17 IST Report Abuse
R.RAMACHANDRAN மக்கள் பணத்தில் சொகுசாக எப்போதும் எதையும் செய்வார்கள் ஆட்சியில் உள்ளவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X