பொது செய்தி

இந்தியா

பகுதி நேர ஊரடங்கு ஆந்திராவில் அமல்

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பதி:ஆந்திராவில், வரும், 5ம் தேதி முதல், பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தினால் மட்டுமே தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என, ஆந்திர அரசிடம், அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, முதல்வர்

திருப்பதி:ஆந்திராவில், வரும், 5ம் தேதி முதல், பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.

ஊரடங்கு அமல்படுத்தினால் மட்டுமே தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என, ஆந்திர அரசிடம், அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில், வரும், 5ம் தேதி முதல், பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, காலை, 6:00 - மதியம், 12:00 மணி வரை மட்டுமே கடைகள், வியாபார நிறுவனங்கள் திறந்திருக்கும். அதற்கு மேல், அத்தியாவசிய பொருட்கள் தயார் செய்யும் நிறுவனங்கள், மருந்த கங்கள் உள்ளிட்டவை மட்டும் செயல்படலாம்.மேலும், மதியம், 12:00 மணிக்கு மேல், மக்கள் தேவையில்லாமல் சாலைகளில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X