முதல்வராக மம்தா நாளை பதவி ஏற்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
கோல்கட்டா:மூன்றாம் முறையாக, மேற்கு வங்க முதல்வராக, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, நாளை பதவி ஏற்கிறார்.மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' அடித்துஉள்ளது.இதையடுத்து, திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கோல்கட்டாவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. இதில், மம்தா பானர்ஜியை

கோல்கட்டா:மூன்றாம் முறையாக, மேற்கு வங்க முதல்வராக, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, நாளை பதவி ஏற்கிறார்.

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' அடித்துஉள்ளது.இதையடுத்து, திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கோல்கட்டாவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. இதில், மம்தா பானர்ஜியை புதிய முதல்வராக, எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.

இது குறித்து, கட்சியின் பொதுச் செயலர் பார்த்தா சட்டர்ஜி கூறியதாவது:மேற்கு வங்கத்தின் முதல்வராக, கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, மூன்றாம் முறையாக நாளை பதவி ஏற்கிறார். ஏற்கனவே சபாநாயகராக இருந்த பிமன் பானர்ஜி, இடைக்கால சபாநாயகராக இருந்து, எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X