பொது செய்தி

இந்தியா

பூனாவாலா புகார் செய்ய மஹா., அரசு அறிவுரை

Added : மே 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை:'சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலா, தனக்கு வந்த மிரட்டல் குறித்து, போலீசில் புகார் செய்யலாம்' என, மஹாராஷ்டிர அரசு தெரிவித்துஉள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., - காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, புனேவில் உள்ள, 'சீரம் இந்தியா' நிறுவனம், 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கிறது.

மும்பை:'சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலா, தனக்கு வந்த மிரட்டல் குறித்து, போலீசில் புகார் செய்யலாம்' என, மஹாராஷ்டிர அரசு தெரிவித்துஉள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., - காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, புனேவில் உள்ள, 'சீரம் இந்தியா' நிறுவனம், 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கிறது. தற்போது, கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது.

அதற்கேற்ப சீரம் நிறுவனம், தயாரிப்பை உடனடியாக அதிகரிக்க முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில், 'தடுப்பூசி கேட்டு முக்கிய பிரமுகர்களிடம் இருந்து மிரட்டல் வந்ததால், இந்தியாவில் இருந்து குடும்பத்துடன் வெளியேறினேன்' என, அடர் பூனாவாலா, பிரிட்டனில் பேட்டி அளித்திருந்தார். இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் சாம்புராஜி தேசாய் கூறியதாவது:அடர் பூனாவாலா, தனக்கு மிரட்டல் விடுத்தவர்களையும், அவர்களின் தொலைபேசி எண்களையும், போலீசில் வழங்கி புகார் செய்தால், தீவிர விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ''அடர் பூனாவாலாவுக்கு, மத்திய அரசு, 'ஒய்' பிரிவின் கீழ் பாதுகாப்பு கொடுத்துள்ளதால், அவர், இந்தியா வர வேண்டும்; அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்,'' என, மஹாராஷ்டிர காங்., தலைவர் நானா படேல் தெரிவித்துள்ளார்.


'ஒரே நாளில் முடியாது'



சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலாவின், 'டுவிட்டர்' செய்தி:என் கருத்தை ஊடகங்கள் வேறு மாதிரியாக புரிந்து கொண்டன. தடுப்பூசி தயாரிப்புக்கு விசேஷ கவனம், செயல்பாடு ஆகியவை தேவை. தடுப்பூசி தயாரிப்பை ஒரே நாளில் அதிகரித்து விட முடியாது. முன்னேறிய நாடுகள் கூட, போதிய தடுப்பூசி இல்லாமல் திண்டாடுகின்றன. இந்தியாவில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது மிகப் பெரிய பணி. இதுவரை, 26 கோடி, 'டோஸ்' கோவிஷீல்டு தடுப்பூசிக்கு, 'ஆர்டர்' வந்துள்ளது. அதில், 15 கோடி டோஸ் சப்ளை செய்துள்ளோம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
04-மே-202119:46:14 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy மிரட்டுவதே அவர்கள் தாம் எங்கு போய் போய் புகார் செய்வது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X