பொது செய்தி

இந்தியா

ஐரோப்பிய கமிஷன் தலைவர் பிரதமர் மோடியுடன் பேச்சு

Added : மே 04, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து, ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டர் லேயனுடன், பிரதமர் நரேந்திர மோடி, ஆலோசனை நடத்தினார்.நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டர் லேயனுடன், நம் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.
 ஐரோப்பிய கமிஷன் தலைவர் பிரதமர் மோடியுடன் பேச்சு

புதுடில்லி:கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து, ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டர் லேயனுடன், பிரதமர் நரேந்திர மோடி, ஆலோசனை நடத்தினார்.

நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டர் லேயனுடன், நம் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். அதில், ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியாவில், கொரோனாவால் நிலவும் சூழல் குறித்து, இருவரும் ஆலோசனை நடத்தினர்.

மேலும், வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, உர்சுலாவிடம், பிரதமர் மோடி தகவல்களை பகிர்ந்தார். பின், இந்த நெருக்கடி காலகட்டத்தில், இந்தி யாவுக்கு அளித்துள்ள ஆதரவு மற்றும் உதவிக்காக, ஐரோப்பிய கமிஷன் தலைவருக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.வரும், 8ம் தேதி, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா இடையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கவுள்ள மாநாடு குறித்தும், இருவரும் கலந்துரையாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X