மதுபான விளம்பரம் அரசுக்கு 'நோட்டீஸ்'

Added : மே 04, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லியில், பொது இடங்களில் மதுபான விளம்பரங்களை அகற்றக்கோரியது தொடர்பான வழக்கில், மாநில அரசு பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் , 'நோட்டீஸ்' அனுப்பியது.டில்லி உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் துருவ் சாவ்லா தாக்கல் செய்த பொதுநல மனு: டில்லியின் பல்வேறு பகுதிகளில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு மதுபான நிறுவனம், விளம்பர பலகைகள் அமைத்துஉள்ளது.போதை பொருட்களுக்கு, பொது

புதுடில்லி:டில்லியில், பொது இடங்களில் மதுபான விளம்பரங்களை அகற்றக்கோரியது தொடர்பான வழக்கில், மாநில அரசு பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் , 'நோட்டீஸ்' அனுப்பியது.

டில்லி உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் துருவ் சாவ்லா தாக்கல் செய்த பொதுநல மனு: டில்லியின் பல்வேறு பகுதிகளில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு மதுபான நிறுவனம், விளம்பர பலகைகள் அமைத்துஉள்ளது.போதை பொருட்களுக்கு, பொது இடங்களில் விளம்பரம் செய்வதும் விதிமீறல். இது தொடர்பாக, இந்திய விளம்பர தர கவுன்சிலுக்கு புகார் அளித்தேன்.

விளம்பரங்கள் அமைக்க, டில்லி மாநகராட்சி அனுமதி வழங்கியது தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், விபரங்கள் கேட்டேன்.இதற்கிடையே, விளம்பரங்கள் மாற்றி அமைக்கப்பட்டதாக, அதற்கான தர கவுன்சிலில் இருந்து தகவல் கிடைத்தது.இருப்பினும், அந்த விளம்பரங்கள் விதிகளை மீறுவதாகவே அமைந்துள்ளது. எனவே, அவற்றை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி, டி.என்.படேல் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.இது தொடர்பாக, டில்லி அரசு, மாநகராட்சி மற்றும் மதுபான நிறுவனம் பதில் அளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X